ஆந்திரா: ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலி!
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே வந்துகொண்டிருந்த நான்டட் - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில், ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரிலிருந்து இரவு 10.45 மணிக்கு நான்டட் நோக்கி சென்றுகொண்டிருந்த அந்த ரயில் அதிகாலை ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கொத்தசேவூர் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தப்போதே ரயிலின் இரண்டாம் தர குளிர்சாதன பெட்டியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகில் இருந்த மற்ற பெட்டிகளுக்கும் வேகமாக பரவியது. அதிகாலையில் பயணிகள் தூங்கிக்கொண்டிருந்ததால், தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். ஒருசிலர் தீயில் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பெட்டி முழுவதும் எரிந்து புகை மூட்டமாக காணப்படுவதால் மீட்பு பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க விரைந்துள்ளதாகவும் ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
Category: மாநில செய்தி

0 comments