"மாணவர்களிடம் செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்'-மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது!
மாணவ, மாணவிகளிடையே செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும் என்றார் .மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது
பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளியின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
கேந்திர வித்யாலயா பள்ளிக்குச் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் இடம் வாங்க பெற்றோர் அனைவரும் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளி அமைந்துள்ளதால் போக்குவரத்து, அடிப்படை வசதிகளுக்கு தகுந்த இடமாகவும், பாதுகாப்பான இடமாகவும் அமைந்துள்ளது. அன்றாடம் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை மாணவ, மாணவிகளிடையே வளர்த்தால் சமுதாயத்தில் நிகழும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடியும். தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து, சமுதாய பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், தனித்திறமைகளை வளர்க்கும் வகையில் மாணவர்களிடையே குழுவை உருவாக்க வேண்டும். இயற்கை ஆர்வம், விளையாட்டு, சமுதாய நலன், தனித்திறமைகள், புத்தக வாசிப்பு, கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு வகையான திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில் குழு இருக்க வேண்டும் என்றார்.
Category: மாவட்ட செய்தி


0 comments