பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட சிறப்பு குறை தீர் திட்ட முகாமில் 3645 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்!
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட் டத்தில் இரண்டாம் கட்டமாக நடை பெற்ற சிறப்பு குறை தீர் திட்ட முகாம்களில் மொத்தம் 5 ஆயிரத்து 559 மனுக் கள் பெறப்பட்டு 3 ஆயிரத்து 645 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக் டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
சிறப்பு குறை தீர் திட்ட முகாம்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு குறை தீர் திட்ட முகாம்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. இம் முகாம்களில் இலவச வீட்டு மனை பட்டா, சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்ட சான்றிதழ் கள் வேண்டியும், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, உள்ளிட்ட உதவித்தொகை வேண்டியும், புதிய குடும்ப அட்டை வேண்டியும் மேலும் பல்வேறு நலத்திட்டங்கள் வேண்டியும் பொதுமக்கள் வழங்கும் மனுக் களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதியுடை நபர்களுக்கு உடனுக்குடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டு வருகிறது.
82 கிராமங்களில்
அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கி வரும் இந்த திட்ட முகாம்கள் இரண்டாம் கட்டமாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 7 இரண்டாம் கட்ட முகாம்கள் 82 கிராமங்களில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டாம் கட்ட முகாம்களில் மொத்தம் 5 ஆயிரத்து 559 மனுக்கள் பெறப்பட்டு 4 ஆயிரத்து 427 மனுக்கள் ஏற்¢கப்பட்டு 3 ஆயிரத்து 645 மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள் ளது. மீதமுள்ள 782 மனுக்கள் நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. 1,132 மனுக்கள் உரிய காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டுள் ளது. இனிவரும் காலங்க ளிலும் இந்த திட்ட முகாம் களில் வழங்கப்படும் மனுக்க ளின் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.
எனவே பொதுமக்கள் வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் தங்கள் பகுதியில் நடைபெறும் சிறப்பு குறை தீர் திட்ட முகாம்களை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி


0 comments