கும்பகோணத்தில் கள்ளநோட்டு தயாரித்த 3 கல்லூரி மாணவர்கள் கைது!
![]() |
| (அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுக்களுடன், அதை தயாரிக்க பயன்படுத்திய மெஷின்கள்) |
கும்பகோணம், டிச. 22:
கும்பகோணம் அருகே கள்ள நோட்டுக்கள் தயா ரித்து புழக்கத்தில் விட்ட கல்லூரி, ஐடிஐ மாணவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த தாராசுரத்தை சேர்ந்தவர் பழனிவேல்(45). நேற்று இரவு இவரது மளிகைக் கடைக்கு 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் 100 ரூபாய் நோட்டை கொடு த்து, ஒரு குளியல் சோப் ரூ.20க்கு வாங்கினர். பின்னர் மீதி ரூ.80ஐ வாங்கி சென்றனர். பின்னர் அதே நபர்கள் அடுத்ததாக உள்ள சண்முகம் என்பவரது மளிகை கடைக்கு சென்று, அதே போல 100 ரூபாய் நோட்டை கொடுத்து ரூ.20 க்கு பல் துலக்கும் பிரஷ் வாங்கினர். அப்போது அதை பார்த்துக் கொண்டிருந்த சோப் கொடுத்த கடைக்காரர் பழனிவேலுக்கு, தான் வாங்கிய 100 ரூபாய் நோட்டு மீது சந்தேகம் ஏற்பட்டது. இத னால் அவர்கள் கொடுத்த 100 ரூபாய் நோட்டை எடுத்து பழனிவேலு பலமுறை திருப்பி பார்த்த போது, அது கள்ளநோட்டு என்பதை தெரிந்து கொண் டார். உடனே அந்த நபர் களை பிடிக்கும்படி கூச்சல் போட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத் தில் உள்ளவர்கள் ஓடிவந்து துரத்தி அவர்களில் 2 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள், தஞ்சை பள்ளியக்ரகாரத்தை சேர்ந்த டீக் கடை ஊழியர் முரு கேசன்(29), தஞ்சை அன்னப்பன் பேட்டையைச் சேர்ந்த ஐடிஐ மாணவர் மணிகண்டன்(21) என்பது தெரிய வந்தது. பின்னர் 2 பேரையும் பொதுமக்கள் கும்பகோணம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். டிஎஸ்பி சுயம்பு, இன்ஸ்பெக்டர் முருகவேல் ஆகி யோர் 2 பேரையும் கைது செய்து தப்பி ஓடிய நபர் குறித்து அவர்களிடம் விசாரித்தனர். அதில், அந்த நபர் திட்டை நெய்தலூரை சேர்ந்த சின்னையன் மகன் சிலம்பரசன்(21) என்பதும், கரந்தை கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வரும் நிலையில், சொந்தமாக ஸ்டூடியோ வைத்து உள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரையும் கைது செய்த னர். பின்னர் போலீசார், 3 பேரிடம் இருந்து 100 ரூபாய் நோட்டுகள் 16ஐ கைப்பற்றினர். மாணவர் சிலம்பரசன் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஸ்டூடியோவில் இருந்த போது அங்குள்ள ஸ்கேனர் மூலம் 100 ரூபாய் நோட்டை சாதாரண வெள்ளைத்தாளில் ஸ்கேன் செய்து பிரின்ட் எடுத்தார். அப்போது அது ஒரிஜினல் நோட்டு போலவே இருந் தது. இதை அவர் தனது நண்பர்களான முருகேசன், மணிகண்டன் ஆகியோரிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு கள்ள நோட்டு தயாரிக்கும் எண்ணம் தோன்றியது. சிலம்பரசன் தனது லேப்டாப் மூலம் 100 ரூபாய் நோட்டை தயாரிக்கலாம் என ஐடியா கொடுத்தார். இதற்காக பிரின்டர் மற்றும் சாதாரண வெள்ளை காகிதம் ஆகியவற்றை வாங்கி வந்து முருகேசன் வீட்டில் கடந்த வாரம் கள்ள நோட்டு தயாரிக்கும் பணியை தொடங்கியது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியபோது, 100 ரூபாய் நோட்டுகள் 33, 10 ரூபாய் நோட்டுகள் 252 ஆகியவை இருந்தது.
இது தவிர 147 நூறு ரூபாய் நோட்டுகள் ஸ்கேன் செய்து சைடு கட் டிங் செய்யப்படா மல் இருந் தது. அவற்றையும், கம்ப்யூட்டர், பிரின்டர் உள் ளிட்ட சாதனங் களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளநோட்டு தயாரிப்பில் வேறு யாருக்கே னும் தொடர்பு உள்ளதா எனவும் போலீ சார் விசாரித்து வருகின்றனர்.
Category: மாநில செய்தி


0 comments