.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஷார்ஜாவில் 22 வயது இந்திய மாணவி மர்ம மரணம்!

Unknown | 4:05 PM | 0 comments

ஷார்ஜா: ஷார்ஜாவில் 22 வயது இந்திய மாணவி ஒருவர் அவரது வீட்டின் படுக்கை அறையில் தூக்கு போட்ட நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ஷார்ஜா மருத்துவமனையில் இருந்து ஐக்கிய அரசு எமிரேட் போலீசாருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசர அழைப்பு வந்தது. கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட அடையாளத்துடன் 22 வயது இளம் பெண்ணின் சடலம் ஒன்று தங்களது மருத்துவமனைக்கு வந்துள்ளதாக கூறியுள்ளனர். 
இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற சிஐடி போலீசார், சடலத்தைக் கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அந்த இளம் பெண்ணின் சாவின் பிண்ணனியில் உள்ள மர்ம முடிச்சு விடுபடும் என போலீசார் தெரிவித்தனர். 
இது தொடர்பாக, அந்த பெண்ணின் தந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ‘எனது மகள் எதற்காக தூக்கு மாட்டிக் கொண்டாள் என்பது எனக்கு புரியவில்லை. அவளது படுக்கை அறையில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துப் போனேன்' என்று அவர் போலீசாரிடம் தெரிவித்தார். 
மரணமடைந்த மாணவி கல்லூரியில் படித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1