புஷ்ரா நல அறக்கட்டளையின் செயற்குழு கூட்டம் வி.களத்தூரில் நடைபெற்றது!
வி.களத்தூரில் (30.10.2013) புதன் கிழமை புஷ்ரா நல அறகட்டளையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. துபையில் இருந்து வந்திருந்த பொது செயலாளர் அப்துல் சலாம், N.P.அலிராஜா,அப்துல்லா பாஷா,நூர் முஹம்மது,ஷபியுல்லா போன்றவர்கள் கூட்டத்தில்
கலந்துகொண்டனர். வி.களத்தூர் கிளை செயல்பாடுகள் பற்றியும், வி.களத்தூர் மக்களுக்கு இன்னும் செய்ய வேண்டிய உதவிகள் மற்றும் அவர்களின் தேவைகள் பற்றியும் கேட்டறிந்தனர். பிறகு பக்ரித் கேக் டெலிவரி துபாய் வரவு மற்றும் கேக் டெலிவரிக்கு ஆனா செலவுகள் காண்பிக்கப்பட்டது. மேலும் கல்வி உதவி தொகை கேட்டு வந்திருந்த மனுக்கள் பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது.
வி.களத்தூர் கிளை அலுவலகத்திற்கு முழு நேர பணியாளர் நியமிப்பது பற்றி துபாய் நிர்வாகிகளிடம் ஆலோசிப்பது, வி.களத்தூர் கிளையில் மேலும் அதிக உறுபினர்களை சேர்ப்பது, மக்களிடமிருந்து வரும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் முடிந்த பிறகு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யபட்டிருந்தது .
Category: வி.களத்தூர்








0 comments