.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நாளை திருச்சியில் ஷரீஅத் மாநாடு!

Unknown | 10:38 PM | 0 comments

திருச்சி, நவ 02-
திருச்சி மாநகர,மாவட்டஜமாஅத்துல் உலமா சபைசார்பில் மாபெரும் ஷரீஅத்மாநாடு நவம்பர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் இரவு 9 மணி வரை திருச்சி சிங்காரதோப்பு நியூகோல்டன் மஹாலில் நடைபெறுகிறது.
மார்க்க கல்வி விழிப்புணர்வு 
காலை 9 மணி முதல் 1 மணிவரை நடைபெறும் முதல்அமர்வில் மார்க்க கல்வி விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கம் நடைபெறுகிறது. திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரிமுதல்வர் மௌலானா ஏ.முஹம்மது ரூஹுல் ஹக் ஹள்ரத் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மௌலானா உபைதுல்லாஹ் இறைவசனங்களை ஓதுகிறார். மௌலானா கே.முஹம்மது ஹுசைன் வரவேற்று பேசுகிறார். மௌலான முஹம்மது பசீம் துவக்கவுரை நிகழ்த்துகிறார். மேலப்பாளையம் மௌலானா எஸ்.எஸ். ஹைதர் அலிமிஸ்பாஹி, சென்னை அடையார் மௌலானா எம். சதீதுத்தீன்பாகவி, சென்னை எஸ்.முஹம்மது ரபீக் சாகிப் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். மௌலானா எஸ்.அப்துஸ் ஸலாம் நன்றிகூறுகிறார்.
விழிப்புணர்வு பட்டிமன்றம்
பிற்பகல் 2.30 மணிக்கு பிள்ளைகளின் சீரழிவிற்கு பெரிதும் காரணமாக இருப்பது வீட்டு சூழலா, வெளிச் சூழலா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. மாநகர ஜமா அத்துல் உலமா தலைவர் மௌலானா கே. ஜலீல் சுல்தான் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மௌலவி முஹம்மது அன்சாரி இறைவசனங்களை ஓதுகிறார். மாநகர ஜமாஅத்துல் உலமா செயலாளர் மௌலானா டி.கே.முஹம்மது யூசுப் வரவேற்று பேசுகிறார். சேலம் மௌலானா எம்.அபூதாஹிர் பாகவி பட்டிமன்ற நடுவராகவும், மௌலானா எம். நூர் முஹம்மது மக்தூமி,மௌலானா ஏ. சிராஜுதீன் மன்பஈ, மௌலானா இ.முஹம்மது ஷெரீப் யூசுபி,மௌலானா எம். அல் அமீன் யூசுபி ஆகியோர் வாதிடுபவர்களாகவும் பங்கேற்கின்றனர். மாநகர பொருளாளர் மௌலானா கே.எம். அபூபக் கர்சித்தீக் நன்றி கூறுகிறார்.
ஷரீஅத் அரங்கம்
மஃரிப் தொழுகைக்குப்பிறகு றடைபெறும் 3வது அமர்வான ஷரீஅத் அரங்கம் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி தலைமையில் நடைபெறு கிறது.
திருச்சி பஷீருல் உலூம் அரபிக்கல்லூரி முதல்வர் ஏ.அஹ்மத் கபீர் வாழ்த்துரை வழங்குகிறார். மௌலானா எம்.ஜமீலுர் ரஹ்மான், இறைவசனங்களை ஓதுகிறார். மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளரும் திருச்சி மாநகர மாவட்ட  இந்திய யூனியன்முஸ்லிம் லீக் தலைவருமான மௌலானா முஃப்தி மௌலானா எஸ்.ஏ.எச். உமர் பாரூக் மழாஹிரி வரவேற்று பேசுகிறார்.மாவட்ட ஜமாஅத்துல் உலமா செயலாளர் மௌலவி முஹம்மது மீரான் நிகழ்ச்சி களை தொகுத்துவழங்கு கிறார்.
இந்திய யூனியன் முஸ்லிம்லீகின் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் (முன்னாள்எம்.பி),“ஷரீஅத் சட்டங்களும் இந்திய சட்டமும்’’ என்றதலைப்பில் சிறப்புறையாற்றுகிறார்.
மாநாட்டு வரவேற்புகுழு தலைவர் மௌலானா கே.முஹம்மது அலிமுத்தீன் நன்றி கூறுகிறார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1