துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை!நாளை வரை நீடிக்க வாய்ப்பு!
துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை : சனிக்கிழமை வரை நீடிக்க வாய்ப்பு
துபாய் : துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா, ஃபுஜைரா, அல் அய்ன், ருவைஸ் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் 21.11.2013 வியாழக்கிழமை காலை மழை பெய்தது.
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேகமூட்டமாகவே இருந்து வருகிறது. இந்நிலை சனிக்கிழமை காலை வரை தொடரலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அபுதாபி அமீரகத்தில் உள்ள ருவைஸ் மற்றும் எல்லைப் பகுதிகளில் கடும் இடியுடன் மழை பெய்துள்ளது.
மோசமான காலநிலை நிலவுவதால் மக்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் வாகனத்தின் வேகத்தை குறைத்துச் செல்ல காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
மழையின் காரணமாக அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. நெடுஞ்சாலைகளில் வெளிச்சம் குறைந்து காணப்பட்டதால் வாகன் ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
இக்காலநிலை சனிக்கிழமை வரை நீடிக்க வாய்ப்புள்ளதால் மழை அடிக்கடி வர வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





Category: துபாய்

0 comments