.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

இன்டர்வியூவுக்கு தயாராவது எப்படி?

Unknown | 8:23 PM | 0 comments

இன்டர்வியூவுக்கு போகிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்குத்தான். முதலில் எந்த இடத்தில் இன்டர்வியூ என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். கடைசி நிமி டத்தில் ஆட்டோவில் ஊரைச் சுற்றி வருவதற்குள் இன்டர்வியூ தொடங்கி நடந்து கொண்டிருக்கும்.
இன்டர்வியூவுக்கே சரியான நேரத்திற்கு வர முடியாதவர், வேலை கொடுத்தால் எப்படி வருவாரோ என்ற சந்தேகம், கிடைக்கவிருக்கும் வேலையை காலி பண்ணி விடும்.
இன்டர்வியூ உள்ளூர் என்றால், அந்த இடத்துக்கு உங்கள் ஏரியாவில் இருந்து எவ்வளவு தூரம்? பஸ், ரெயில் வசதி உண்டா? அல்லது ஆட்டோ தான் சரியாக இருக்குமா? என்பதை யெல்லாம் இன்டர்வியூவுக்கு முந்தின நாளுக்குள் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
இதுவே வெளியூரில் இருந்து வருகிறீர்கள் என்றால், இன்னும் கவனம் அவசியம். குறிப்பாக திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்டர்வியூ வருகிற ஒருவர், முந்தின நாள் மாலையில் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணியளவில் தான் சென்னை வர முடியும்.
இங்கோ இன்டர்வியூ காலை 10 மணிக்கு தொடங்கும். இதற்குப் பிறகு நீங்கள் குளித்து டிபன் முடித்து தயாராகி பைலோடு இன்டர்வியூ நடக்கும் இடத்தை அடைய நிச்சயம் தாமதமாகி விடலாம். இதனால் முடிந்தவரை மூன்று மணி நேரத்துக்கு முன்பாவது இன்டர்வியூ நடக்கும் ஊரில் நீங்கள் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இதெல்லாமே நல்லபடியாக நடந்து இதோ இன்டர்வியூ நடக்கும் அலுவலகம் வந்து விடுகிறீர்கள். உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறீர்கள். அப்போது தேவையில்லாத டென்ஷனை தவிர்த்து விடுங்கள். இன்டர்வியூ அறையில் நீங்கள் நுழைந்ததும் முதலில் கேட்கப்படுகிற கேள்வி, உங்களைப் பற்றியதாகத்தான் இருக்கும்.
உட்காரச் சொன்னதும் உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்று தான் பெரும்பாலும் ஆரம்பிப்பார்கள். அதாவது உங்களைப் பற்றி ரத்தினச்சுருக்கமாக நீங்களே சில வரிகள் சொல்ல வேண்டும். இந்த முதல் கேள்விக்கு எந்தவித தயக்கமுமின்றி நீங்கள் சொல்லப்போகும் பதிலில் தான் இன்டர்வியூ அதிகாரிகள் அடுத்தடுத்த கேள்விகளுடன் உங்களுடன் இயல்பாக பயணிக்க தயாராவார்கள்.
முதல் கேள்விக்கான பதிலை நீங்கள் முன்கூட்டியே இந்த மாதிரி சொல்லலாம் என்பதை மனத்திரையில் ஓட விட்டு தயார் செய்து கொள்ளுங்கள். அதை அதிகாரிகள் முன்னிலையில் மிகவும் கேஷூவலாக சொல்லுங்கள்.
உங்களைப் பற்றி, கல்வி பற்றி, குடும்பம் பற்றி, லட்சியம் பற்றி, உங்களுடைய இன்னபிற பொழுதுபோக்கு அம்சங்கள் பற்றி என உங்கள் சம்பந்தப்பட்ட அத்தனை பாசிட்டிவ் விஷயங்களையும் பதட்டமின்றி சொல்லிவிடுங்கள்.
இந்த நேரத்தில் திணறலோ, மூச்சு வாங்கலோ வேண்டாம். பாடம் ஒப்பிக்கிற குழந்தை மாதிரியே இந்த பயோடேட்டா அமைந்திருக்கவேண்டியதில்லை. போகிறீர்களோ, அந்த கம்பெனியைப் பற்றிய மொத்த தகவல்களையும் அதாவது அந்த கம்பெனி தயாரிக்கும் பொருட்கள், அதன் மார்க்கெட் நிலவரம் வரை ஒரு குறிப்பு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதற்கு அந்த கம்பெனியின் வெப்சைட்டில் உங்கள் பார்வையை ஓட விட்டாலே போதும். நீங்கள் இன்டர்வியூ செல்லப்போகும் கம்பெனியில் உங்கள் பள்ளி, கல்லூரி நண்பர்கள் யாராவது வேலை பார்க்கிறார்கள் என்றால், அவர்களிடம் அந்த கம்பெனியில் மிக சமீபத்தில் நடந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
கம்பெனி தொடர்பான கேள்வியின்போது இந்த பதில் பொருத்தமான இடத்தில் சொல்லப்பட்டாலே போதும். நிர்வாகம் உங்களை உற்றுக்கவனிக்கத் தொடங்கி விடும். எந்த கம்பெனியில் இன்டர்வியூ உங்களுடைய ஒவ்வொரு பதில்களும், உங்கள் வெற்றிக்கான வழிகள் தான். அதனால் அதைக் கொஞ்சம் விரிவாகவும் சொல்லலாம்.
சமீபத்தில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு மைக்ரோ சாப்ட் கம்பெனி, தான் நடத்திய கேம்பஸ் இன்டர் வியூவில் கலந்து கொண்ட 120 பேரில் 8 பேரை மட்டும் செலக்ட் செய்தது.
இந்த இன்டர்வியூவில் கலந்து கொண்ட 120 பேரை இன்டர்வியூ செய்த வீடியோவில் இருந்து, அந்த 120 பேரும் பேசிய முதல் ஒரு நிமிடத்தை மட்டும் ‘கட்’ செய்து, அதை மட்டும் வேறு 6 சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.
நடந்தது என்ன தெரியுமா? அவர்களும் அதே எட்டுப் பேரைத்தான் செலக்ட் செய்திருந்தார்கள். இதில் இருந்து தெரிவது, நீங்கள் இன்டர்வியூவில் பேசும் முதல் ஒரு நிமிடம், அதாவது உங்களைப் பற்றிய முதல் கண்ணோட்டமே 90 சதவிகிதம் உங்கள் வேலையை உறுதி செய்து விடுகிறது.
விடைபெறும்போது இருக்கும் அத்தனை அதிகாரிகளிடமும் உங்கள் முகம் பதிகிற மாதிரி முறுவல் முகமாய் விடை பெற்று வாருங்கள். இது நிச்சயம் வேலை கிடைத்து விடும் என்ற உங்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறதாகக் கூட அவர்கள் பார்வைக்குப்படும். பிறகென்ன, வெற்றி நிச்சயம் தானே!

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1