.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் யோகா-இயற்கை சிகிச்சை மையம்!

Unknown | 8:40 PM | 0 comments

சென்னை, நவ.30-

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் யோகா மற்றும் இயற்கை சிகிச்சை மையம் ரூ.9 கோடியே 60 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது.

இன்றைய அவசர உலகில் மன அழுத்தத்தில் பல நோய்கள் வருகின்றன. இந்த மன அழுத்தத்தைபோக்கவும், மன அழுத்தம் வராமல் தடுக்கவும் யோகா கலை உதவுகிறது. தினமும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளில் பலர் யோகா மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கைத்தர சிகிச்சை மையம் தேவைப்படுகிறது.

இதை அறிந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா மக்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழ்நாடு சட்டசபை விதி 110-ன் கீழ் ஒரு அறிவிப்பில் ரூ.9 கோடியே 60 லட்சம் செலவில் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கைத்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பின் படி அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இந்த யோகா மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கைத்தர சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது.

18 மருத்துவக்கல்லூரிகளிலும் ஒரு உதவி மருத்துவர் உள்ளிட்ட 4 பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மையம் அமைக்க நோயாளிகள் அறை, யோகா அறை ஆகியவறை அமைக்கப்படுகிறது. மேலும் நீர்வழி சிகிச்சை, மண்வழி சிகிச்சை, காந்த சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, கலர் சிகிச்சை, மின் சிகிச்சை, அக்குபஞ்சர் சிகிச்சை, தேக பயிற்சி சிகிச்சை ஆகியவையும் அளிக்கப்பட உள்ளது.

இதுபோன்ற வசதி அனைத்தும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் அமைக்கப்பட உள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1