ஷார்ஜாவில் அப்துல் கலாமிற்கு வரவேற்பு!
ஷார்ஜா : துபாய் முத்தமிழ் சங்கம் சார்பாக இந்திய முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல் கலாமிற்கு ஷார்ஜா ஹோட்டல் ஹில்டனில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாய் முத்தமிழ் சங்கம் சார்பில் தலைவர் மோகன் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். மேலும் துபாய் முத்தமிழ் சங்க நிர்வாகிகள் ஷா, அனிஸ், சிகாமணி, சர்தார், பாரதி, நூர்ஜஹான், ஷர்மிளா உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளையும் அப்துல் கலாம் மற்றும் டாக்டர்.பொன்ராஜ் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். வரவேற்பு நிகழ்ச்சியில் ஆடிட்டர் நாகராஜன், நவாஸ், அபு, ஷப்னம், பெருமாள் மற்றும் திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். அப்துல் கலாம், தன்னை கௌரவப்படுத்தியமைக்காக துபாய் முத்தமிழ் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
Category: துபாய்


0 comments