பெரம்பலூரில் கார் ஓட்டுநர் இலவச பயிற்சி!
கார் ஓட்டுநர் பயிற்சி பெற அழைப்பு விடுத்துள்ளார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநர் ஜி. பார்த்தசாரதி.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூரில் உள்ள, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், டிச. 9-ம் தேதி முதல் கார் ஓட்டுநர் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இதில் சேர 18 முதல் 35 வயதுக்கு குறைவாகவும், 8-ம் வகுப்பு படித்த, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுயத்தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
பயிற்சி முடிந்தவுடன், தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். மேற்கண்ட பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றுடன், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் நகல் மற்றும் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கிராமிய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ரெங்கா நகர் (வாசுகி பால்ராஜ் மருத்துவமனை அருகில்), ஆத்தூர் சாலை, பெரம்பலூர் 621212, (தொலைபேசி -277 896) என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.'
Category: மாவட்ட செய்தி, வேலைவாய்ப்பு


0 comments