பெரம்பலூரை கோமாரி நோய் இல்லாத மாவட்டமாக்க வேண்டும் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு!
குன்னம், நவ.21-
கோமாரி நோய் இல்லாத மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று - பேரளி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் தரேஸ் அஹமது கேட்டுக் கொண்டார்.
சிறப்பு கிராமசபை கூட்டம்
கோமாரி நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரளி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோமாரி நோய் கால்நடைகளுக்கு எவ்வாறு பரவுகிறது என்பது குறித்தும், இந்நோய் வராமல் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர்,¢ கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோர் விரிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைத் தனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசி யதாவது:-
நடவடிக்கை
தமிழக முதலமைச்சர் கால்நடைகளை தாக்கும் “கோமாரி” நோயை தடுப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதற்கான விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்த அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங் களை நடத்த உத்தரவிட்டதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள,வி.களத்தூர் உள்பட 121 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
19.9.2013 முதல் 10.10.2013 வரை பெரம்பலூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த கால்நடைஉதவி மருத்துவர் கள், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவி யாளர், ஆவின் பால்உற்பத்தி சங்கங்களின் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுக்கள் மூலம் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
1 லட்சத்து 15 ஆயிரம் கால்நடைகள்
இதில் 1லட்சத்து 15 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு “கோமாரி” நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகி றது.
மேலும் நோய் தாக்கப்பட்ட கால்நடைகளின் கொட்டகை கள், கால்நடைகள் நடமாடும் இடம், தீவனம், கால்நடைகளை பராமரிப்ப வர்கள் மீது கிருமி நாசினிகளை தெளிப்பதின் மூலம் நோய் வேறு இடத்திற்கு பரவாமல் தடுக்க முடியும். பிளீச்சிங்பவுடரை நோய் தாக்கிய கால்நடைகளின் கிராமங்களின் வீதிகளில், கொட்டகையை சுற்றிலும் ஒரு நாளைக்கு மூன்று முறை தெளிப்பதோடு, சோடியம் கார்பனேட் என்ற கிருமி நாசினி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 4 கிராம் பவுடரை கலந்து மாட்டின் உடம்பு, உண்ணும் உணவு, நீர்தொட்டி, ஆகிய இடங்களில் தெளிக் கலாம்.
மேலும் சோடியம் ஹைட்ராக்ஸைடு 400 கிராம் பவுடரை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து நோயுள்ள கால்நடை நடமாடிய இடம், மேய்ச்சலுக்கு சென்ற இடம், கொட்டகை உட்புறம், வெளிபுறத்தில் ஒரு நாளைக்கு மூன்று முறை தெளிக்க வேண்டும்.
வேண்டுகோள்
நோய் தாக்கிய கால் நடைகளின் உரிமை யாளர்கள் வேறு இடங்களுக்கு செல்வதை குறைத்து கொள்வ தோடு, அவ்வாறு செல்லும் பட்சத்தில் கிருமிநாசினி கொண்டு குளித்து உடை மாற்றி செல்ல கேட்டுக் கொள்ளப் படுகி றார்கள். மேற்சொன்ன நட வடிக்கை களை பொது மக்கள் முறை யாக கையாள வேண்டும். கோமாரி நோய் தொற்று இல்லாத மாவட்ட மாக பெரம்பலூரை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண் டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சந்திரசேகர், துணை இயக்குநர் டாக்டர் தங்கராஜ், வேப்பூர் வட்டாரவளர்¢ச்சி அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments