.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

நம் சமுகமும் குழந்தை வளர்ப்பும் !! பெற்றோர்கள் படிக்கவேண்டிய பதிவு !!

Unknown | 2:31 AM | 0 comments

ஒரு குழந்தையை வளர்த்து சமுதாயத்தில் மதிப்புமிக்கவனாகவும் , வெற்றியாளனாகவும் ,சிறந்த மனிதனாகவும் மாற்றும் பொறுப்பு ஒவ்வரு பெற்றோருக்கும் உண்டு என்பது மறுபதர்க்கில்லை. ஆனால் அந்த முழு பொறுப்பும் பெற்றோருக்கு மட்டும் உள்ளது என ஒற்றை வரியில் சொல்லி விட முடியாது .பயற்றுவித்த ஆசிரியர்கள் , அவனை கடந்து போன நட்ப்பு வட்டம் , உறவுகள் , சுற்றியிருக்கும் சமுதாயம், வாழும் கலாசாரம், ஆட்சி செய்யும் அரசு, இப்படி ஒவ்வருத்தருக்கும் ஒரு குழந்தையை சமுதாயத்தில் பயனுள்ளவனாக மாற்றுவதில் பங்கு இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் நம் சமுகத்தில் பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பு ஓர் சவாலாகவும், போராட்டமாகவும் மாறியுள்ளது . கால் நூற்றாண்டிற்கு முன்புவரை நம் சமுகத்தில் பெரும்பான்மை பெற்றோருக்கு குழ்ந்தை வளர்ப்பில் இவளவு சவால்களும் சிக்கல்களும் இருந்தில்லை.இன்று பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு குழந்தை போதும் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறார்கள் . அதனால் அவர்களால் தங்கள் குழந்தைகளுக்கு பொருளாதார ரீதியாக சிறந்தவற்றை கொடுக்க முடியம் என நம்புகிறார்கள். பல குழந்தைகள் உள்ள குடும்பத்தில் குழந்தைகள் சிறுவயதிலேயே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள பழகி விடுகிறார்கள்.அது பொருளானாலும் சரி உணர்வுகளானாலும் சரி .
தனியாக வளரும் குழ்ந்தை எதையும் முழுவதுமாக தனக்கே சொந்தமாக்கி பழகிபோனதால் பிற்காலத்தில் தன்னுடைய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொள்ளும் மனிதனாக மாறிவிடுகிறான். அப்படி இருக்கும் போது ஒருகட்டத்தில் நம் சமுகம் முழுவதும் சுயநலவாதிகளை மட்டும் கொண்டதாக மாறிவிடுகிறது.தனியாக வளரும் குழந்தைகள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள பழகாமல் இருப்பதால் அவர்களுக்கு நட்ப்பு வட்டமும் குறுகிபோய் சமூகத்தோடு ஒன்றிணையவும் சிரமபடுகிரர்கள்.
ஆடுவளர்ப்பு, கோழிவளர்ப்பு புத்தகங்களை போல குழ்ந்தை வளர்ப்பு பற்றிய புத்தகங்கள் இன்று அதிக அளவில் விற்பனை ஆகிக்கொண்டிருகிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நிலமை நம் சமுகத்தில் இருந்ததிலை . கூட்டு குடும்பமாக வாழ்ந்தபோதும், குறைந்தபட்சம் தாத்தா, பாட்டி கூட இருந்தபோதும் சந்தேகங்களை சரிசெய்யவும்,சங்கடங்களுக்கு ஆறுதல் சொல்லவும் உணர்வுள்ள அந்த உறவுகள் பயன்பட்டது. இன்று எல்லா சந்தேகங்களுக்கும் நாம் தேடி செலும் இடம் இணையதளமாக மாறிப்போனது.
செல்ல பிராணிகள் வளர்ப்பு, அழகு குறிப்பு, சமையல் குறிப்புகளை இணையதளத்தில் தேடி படித்து செயல்படுத்தி விடலாம்.அனால் குழ்ந்தை வளர்ப்பை பற்றி படித்து செயல்படுத்துவது கண்டிப்பாக பலன் தராது .ஓர் காலநிலையில் வளரும் தாவரம் கூட இன்னொரு காலநிலையில் வளராமல் போகும் போது , குழந்தைகள் பற்றிய பொதுவாக எழுதபட்ட நூல்கள் எப்படி எல்லா குழந்தைகளுக்கும் பொருந்துவதாக அமையும் ? ஒவ்வரு குழந்தையும் ஒவ்வருவிதமான மனநிலையிலும் வித்தியாசமான சுழ்நிலையிலும் தான் வளர்கிறது .
உங்களுடைய குழந்தைகள் பற்றிய கருத்துகள் உங்களுக்கே தவறாகும் போது எங்கோ ஒரு எழுத்தாளரின் கருத்து எப்படி உங்கள் குழந்தைக்கு பொருத்தமாக அமையும்? புத்தகங்களை படித்து குழந்தைகளை வளர்த்த இது செயல் முறை தேர்வு அல்ல.சரியும் தவறும் நிறைத்தது தான் இந்த குழந்தை வளர்ப்பு. கொஞ்சம் தவறுகள் நிகழ தான் செய்யும். பெரும்பாலான குழ்ந்தை வளர்ப்பு பற்றிய நூல்கள் மேல் நாட்டு குழந்தைகளை மையமாக வைத்து எழுதப்பட்டது . நம் நாட்டில் எழுத பட்ட சில நூல்களும் மேல் நாட்டு ஆரட்சியாளர்களை பின்பற்றியே எழுதபட்டது.
உளவியல் ரீதியாகவும், உடல்ரீதியாகவும், மேல் நட்டு குழந்தைகளுக்கும், இந்திய கலாச்சாரத்தில் வாழும் குழந்தைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. புவியல் காரணிகள் உடலமைப்பு , உணர்வுகள்,உணவு பழக்கவழக்கங்கள் இப்படி ஒவ்வன்றிலும் மேல் நாட்டு குழந்தைகளோடு ஒப்பிடும் போதும் நம் சமுகத்தில் வாழும் குழந்தைகலளுக்கு நிறைய வேறுபாடு இருக்கிறது . இதை உணராமல் நாம் மேல் நாட்டு குழ்ந்தை வளர்ப்பு முறையை பின்பற்ற நினைக்கிறோம் .உலகிலேயே சிறந்த குழந்தை வளர்ப்பு என்றால் அது நம் இந்திய சமுகமாக தான் இருந்தது .
விவாகரத்து என்பது மேற்கத்திய நாடுகளில் சாதாரண செயல் அதனால் அந்த சுழலில் வளரும் குழந்தைகள் அதை சகஜமாக எடுத்துக்கொள்கிறது ,அனால் நம் சமுகத்தில் விவாகரத்து சாதாரண விசியமாக பர்க்கபடுவதிலை எனவே நம் சுழலில் வளரும் குழந்தைகள் இதனால் கண்டிப்பாக உளவியல் ரீதியாக பத்திக்கபடுகிறார்கள் .
இன்று நாம் குழ்ந்தைகளை மன்னில் விளையாட அனுமதிப்பதில்லை அல்லது அதை விரும்புவதில்லை. குழ்ந்தைகள் மன்னில் விளையாடுவதால் ஆரம்பத்தில் சில நோய்கள் ஏற்படலாம் பிறகு குழ்ந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது .இந்திய குழந்தைகளுக்கு மேற்கத்திய குழந்தைகளைவிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.அரைநூற்றாண்டிரற்க்கு முன்பு மண்ணில் விளையாடமல் ஒரு குழந்தை கூட நம் சமுகத்தில் இருந்திருக்காது.
நாகரியம் என்ற பெயரில் அதிக மாதங்கள் தாய்ப்பால் தரும் பழக்கம் நம் சமுகத்தில் மறைந்தகொண்டிருக்கிறது.இயற்க்கை உணவுகளை தவிர்த்து வேதிபோருட்களோடு பெட்டிகளில் அடைத்து விற்க்கபடும் செயற்க்கை உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவதில் பெருமை கொள்வதோடு சமுதாயத்தில் நம்மை மதிப்பு மிக்கவர்களகவும் காட்டிக்கொள்ள முயல்கிறோம் .பல பெற்றோர்கள் தங்களை நாகரியமனவர்களாக கட்டிக்கொள்ள தங்களின் போன தலைமுறை உறவுகளையும், பாரம்பரியத்தையும் குழந்தைகலளிடமிருந்து விலக்கிவைக்கிறார்கள் .பின்பு ஒருநாள் குழந்தைகளும் நாகரிகம் என்ற பெயரில் இவர்களையையும் விலக்கி வைக்க கூடும் என்பதை இவர்கள் உணருவதில்லை .
தங்கள் குழந்தைகள் கிரிக்கெட் விளையடுவதை பெருமையாக நினைக்கும் பெற்றோர்கள், கோலி குண்டு விளையடுவதையையும் கிட்டி புள் விளையடுவதையையும் தரகுறைவாக நினைக்கும் பழக்கம் நம் சமுகத்தில் இருக்க தான் செய்கிறது . கிராமத்து பாரம்பரிய விளையாட்டுகள் இன்று நம்மிடமிருந்து அழிந்து கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் .நம்முடைய குழந்தையை திறமையானவர்களாகவும், அறிவானவர்களகவும் இந்த சமுகத்தின் முன் காட்ட விரும்புகிறோம் . குழந்தைகள் காட்சி பொருள் அல்ல என்பதை பல சந்தர்பத்தில் பல பெற்றேர்கள் உணர மறுக்கிறார்கள் .

கிராமத்தில் வளரும் சிறுவன் பத்து தாவரங்களின் பெயர்களை எளிதில் மனப்பாடம் செய்து கொள்கிறான், நகரத்தில் கணிணியில் அதிகம் புழங்கும் சிறுவன் பத்து மென்பொருளின் பெயர்களை எளிதில் மனப்பாடம் செய்து கொள்கிறான், இதில் ஒருத்தரை மட்டும் எப்படி திறமைசாலி என சொல்ல முடியும்? திறமை என்பது வாழும் சுழ்நிலை பொறுத்தும் கிடைக்கும் வாய்ப்பை பொரறுத்தும் மாறுபடுகிறது . இதை இன்று எத்தனை பெற்றோர்கள் உணருகிறார்கள்
ஒரு குழந்தையை சாதனையாளனாக வளர்க்கும் பெற்றோர்களை விட வாழ்நாள் முழுவதும் எந்த சூழ்நிலையிலும் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க பழகியவனக குழந்தையை வளர்க்கும் பெற்றோர்களே சிறந்த பெற்றோர்கள் . உலகின் அத்தனை சாதனைகளும் மனிதனை மகிழ்சிபடுத்ததான். பெறோர்களின் சமுக அந்தஸ்த்துக்காக வளர்க்கபடும் செல்ல பிராணிகள் அல்ல குழந்தைகள் என ஒவ்வரு பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1