TNTJ வின் பெரம்பலூர் மாவட்ட பொதுகுழு கூட்டம் வி.களத்தூரில் சிறப்பாக நடைபெற்றது!!
TNTJ வின் மாவட்ட பொதுகுழு கூட்டம் இன்று வி.களத்தூர் தௌஹீத் மர்கஸில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லப்பைகுடிகாடு,வி.களத்தூர்,பெ ரம்பலூர்,புதுஆத்தூர்,அரியலூர் போன்ற கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு தொஹீத் ஜமாஅத் சார்பாக முஸ்லிம்களின் இட ஒதுக்கீடிர்காக ஜனவரி 28 மாபெறும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற உள்ளது இந்த சிறை நிரப்பும் போராட்டத்திற்கு எவ்வாறு மக்களை அழைப்பது, இப்போராட்டத்தின் நோக்கம் என்ன, அதை மக்களுக்கு எவ்வாறு எத்தி வைப்பது, இதனால் முஸ்லிம்களுக்கு என்ன பயன், என்று மக்களுக்கு எடுத்து கூறி அவர்களை இப்போராட்டத்திற்கு எவ்வாறு அழைக்க வேண்டும் என்ற அறிவுரைகள் அணைத்து கிளை நிர்வாகிகளுக்கும் இக்கூட்டத்தி ல் வழங்கப்பட்டது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் TNTJ வின் கிளை இல்லாத ஊர்களில் எந்த எந்த கிளை சார்பாக பிரச்சரம் நடத்த வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அனைவருக்கும் வி.களத்தூர் கிளை சார்பாக மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் நிறைவுபெற்று லுஹர் தொழுகைக்கு பின் தர்பிய வகுப்பு நடைபெற்றது..
Category: வி.களத்தூர்

0 comments