பெரம்பலூரில் புதிய சப்– கலெக்டர்- மதுசூதன் ரெட்டி பொறுப்பேற்பு!!
பெரம்பலூர்,அக்.19–
பெரம்பலூர் ஆர்டிஓவாக புஷ்பமாரியம்மாள் பணி புரிந்து வந்தார். இந்நிலையில் அந்த பணியிடத்திற்கு திண்டுக்கல் சப்–கலெக்டராக பணி புரிந்து வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மதுசூதன் ரெட்டி நியமிக்கப்பட்டார். இவர் பெரம்பலுர் சப்– கலெக்டராக பொறுப்பேற்றார். இவரிடம் ஆர்டிஓ புஷ்பமாரியம்மாள் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
சப்–கலெக்டர் மதுசூதன் ஆர்.டி.ஓ. பணிகளை மேற்கொள்ளவுள்ளார். இதனால் ஆர்டிஓ அலுவலகம் இனிமேல் சப்–கலெக்டர் அலுவலகமாக செயல்படும். பெரம்பலூர் ஆர்.டி.ஓ.வாக பணிபுரிந்து புஷ்ப மாரியம்மாள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் முதன் முதலாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சப்–கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: மாவட்ட செய்தி


0 comments