குடித்துவிட்டு கொடுமைப்படுத்திய கணவனால் பசும்பலூர் பெண் விஷம் குடித்து தற்கொலை
வேப்பந்தட்டை,அக்.8:
குடித்துவிட்டு கொடுமைப்படுத்திய கணவனால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே உள்ள பசும்பலூர் கிராம த்தை சேர்ந்தவர் அர்சுணன் (35), புஷ்பா(30), தம்பதியினர். இவர்களுக்கு பெரிய சாமி(13), முரளி(11), மூர்த்தி (9), ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். அர்சுணன் தின மும் குடித்து விட்டு வந்து புஷ்பாவிடம் தகராறில் ஈடுபடுவது வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கணவன், மனைவிக்கு வழக்கம் போல் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த புஷ்பா வீட்டில் வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார். தகவலறிந்த இவரது உறவினர்கள் புஷ்பாவை தனியார் மருத்துவமனையிலும், பின்னர் விழுப்புரம் மருத்துவக்கல் லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனி ன்றி நேற்று அதிகாலை 1 மணியளவில் புஷ்பா இறந் தார். இது குறித்து புஷ்பா வின் அம்மா அழகம்மாள் (72), கொடுத்த புகாரின் பேரில் வி.களத்தூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ., மாரிமுத்து வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
Category: மாவட்ட செய்தி


0 comments