வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு…!
அரசுப் பணிக்கு நமது இளைஞர்களைத் தயார் செய்ய வேண்டும். அதற்காகத்தான் வேலை வாய்ப்பில் இடஒதுக்கடு என்ற வாதம் கேட்பதற்கு நியாயமாகத் தோன்றும்.
இன்றைய அரசு நிர்வாகத்தின் ஈரக்குலையே லஞ்ச லாவன்யத்தால் சீரழிந்துபோய் விட்டது. கடமையைச் செய்வதற்கும் கூட லஞ்சம் கொடுக்காமல் ஒரு ஈ கூட அசையாது என்ற ’’உயர்ந்த நிலைக்கு’’ இந்திய அரசு நிர்வாகம் வந்துவிட்டது. இந்தச் சூழலில் 3.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் புதிதாக அரசுப்பணியைப் பெற்றவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை விவரிக்க வேண்டியதில்லை.
விதிவிலக்காக மத்திய அரசின் ஆட்சிப் பணி (IAS IPS) மட்டும் பெரிய அளவில் சீர்கெடவில்லை.
மத்திய ஆட்சிப் பணிக்கு நமது மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பது மிகச்சரியானதே. அதிகாரம் நிறைந்த துறை, அதற்கு அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களையும் சேர்த்து 27 விழுக்காடு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
இதில் முக்கியமாக கணிக்க வேண்டியது, கவனித்து ”பெருமைப்”பட வேண்டியது முஸ்லிம் சமூக கல்வியாளர்களின் கவனமின்மை.இன்னும் புதுக்கல்லுரி, ஜமால் முகம்மது கல்லூரி, காதர் முகைதீன் கல்லூரி, சதக்கத்துல்லாஹ்அப்பா கல்லூரி, இஸ்லாமியக் கல்லூரி, ஜாஹிர்ஹுசைன் கல்லூரி, வக்ஃபு போர்டு கல்லூரி, கருத்தராவுத்தர் கல்லூரி, SIET போன்ற…
…..50 ஆண்டுகள் பாரம்பர்யமும், பொருளாதார வளமும், மிகச் சிறந்த கட்டமைப்பு வசதிகளும் நிறைந்த கல்லூரிகளின் ” தெளிவான தீர்க்கமான அலட்சியமும் ” முஸ்லிம் மாணவர்களை உருவாக்க வேண்டிய இலக்கில் தெளிவின்மையும் தான் இந்திய ஆட்சிப் பணிக்கு (IAS) தமிழகத்தில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் ஒரு மாணவன் கூட உருவாகாமல் போனதற்குக் காரணம்.
அரசுப் பணியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தும் அமைப்புகள் முதலில் இந்த கல்லூரி நிர்வாகத்திடம் முஸ்லிம்கள் சந்தித்து வருகின்ற சமூக – அரசியல் நெருக்கடிகள் என்ன ? என்பதை கலந்து பேசி அவற்றுக்கேற்ப அடுத்த தலைமுறையை இலக்கு வைத்து உருவாக்க வேண்டிய அவசியத்தை வலிமையாக எடுத்துக் கூற வேண்டும்.
மாணவர்களை சக்கைகளாக மாற்றி வெறும் பட்டங்களைக் கொடுத்து பணம் சம்பாதிக்க மட்டும் அனுப்பும் நடைமுறைக்குக்கு இந்தக் கல்லூரிகள் முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.
CMN SALEEM
Category: கட்டுரை


0 comments