வீடு, நிலம் அல்லது ஏதேனும் சொத்துக்கள் வாங்குவோரது உடனடி கவனத்திற்கு. . .
வீடு, நிலம் அல்லது ஏதேனும் சொத்துக்கள் வாங்க விரும்பும் நமக்கு, அத்துறைகளைப் பற்றிய தக வல்கள் குறைவாகவோ அல்லது எதுவும் தெரியாதவர்களாகவே இருக்கி றோம். இந்த அறியாமை யே நாம் ஏமாற்றப்படுவதற்கும், இடைத்தரகர்கள் கொழிப்பதற் கும் வழி வகுக்கி றது. அதனால் இத்துறைகளைப் பற்றிய அடிப்ப டை விஷயங்களை சேகரித்து பகிர்ந்து கொள்கிறேன்.
சொத்து வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அரசாங்கத் தின் எந்தெந்தத் துறைகளை நாம் அணுக வேண்டும்?மாநில அர சின் பதி வுத் துறை (Registration Department)யும், வருவாய்த் துறை (Revenue
Department)யும், சொத்துப் பரிமாற்றத்தி ல் சம்பந்தப்படும். சொத்து வாங்கிய பின் இவ்விரு துறைகளிலும் உரிமை யாளரின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
பதிவுத் துறையில் நாம் செய்ய வேண்டி ய கடமைகள் என்ன?நாம் கிரையப் பத் திரம் (Sale Deed) செய்யும் சார்பதிவாளர் அலுவலகம் (Sub-Registration Office), பதிவுத் துறை (Registration Department)யின் கீழ் வருகிறது. இ
ங்கு நாம் மற்றவரிடம் இருந்து இடம் வாங்கும்போது அதற்காக அரசாங்கத்தால் நிர்ணயிக் கப்பட்ட விலையில் 8% முத்திரை தீர்வையாக வும் மற்றும் 1% பதிவுக் கட்டணமாகவும் செலு த்துகிறோம்.
ஆகவே, நாம் இடம் வாங்குவதற்கு அரசாங்க த்திற்கு செலுத்த வேண்டிய தொகை யைச் செலுத்தவும் மற்றும் நிலம் விற்பவரும் வாங் குபவரும் சார்பதிவாளர் முன்னிலையில் கிரையப் பத்திரத்தில் கை
யொப்பம் இடவும் சார் பதிவாளர் அலுவலக ம் செல்ல வேண்டி இரு க்கிறது.
இந்தத் துறையின் பதிவேட்டில் ஒருவரிடம் இருந்து மற்றவர் இந்த இடத்தை வாங்கி இ ருக்கிறார்; அதற்கான பத்திர எண் இது என்ற விபரம் மட்டுமே இருக்கும். நிலத்தின் உண் மையான உரிமையாளர் யார் என்பது பற்றி இந்தத்துறை அக்கறை கொள்வதில்லை என் பது குறிப்பிடத்தகுந்த விஷயம். இதை முக்கி யமாக மனதில் கொள்ள வேண்டும்.
அப்படியானால் உரிமையாளர் பெயரை எங்கே மாற்றம் செய்ய வேண்டும்?வருவாய்த் துறை (Revenue Department)யில்தான் நிலத்தி
ற்கான விவரங்கள் அனைத்தும் இருக்கும். பட்டா (Patta), சிட்டா (Chitta), அடங்கல் (Adan gal), ‘அ’ பதிவேடு (‘A’ Register), நிலத்தி ற்கான வரைபட எல்லை (FMB) என ஐந்து வகையான பதிவேடுகளை இந்தத் துறை பராமரிக்கிறது.
நிலத்தின் உரிமை நமக்குத்தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் தான் பட்டா என்பது. ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்வதே பட்டாவை வைத்துத்தான். அதில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போ ன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரி வும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன் செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை யின் விவரங்களும் இரு க்கும்.

ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்க ம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா என் பது. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன் செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.
ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்க ம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா என் பது. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன் செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதி வேடுதான் ‘அடங்கல்’ என்பது. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தி ன் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.’அ’ பதி
வேட்டில் (‘A’ Register) கீழ்க்கண்ட விபரங்கள் இருக்கும்
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4.பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,5.
நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) இடம் எவ்வாறு பல பகுதிக ளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என் பதைக் காட்டுகிறது. நிலங்கள் ஏ தாவது ஒரு கிராமத்தின்கீழ் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எண் கொடுக்கப்படும். அதுவே சர்வே எண் என்பது. நம் கிரையப்
பத்திரத்தில் சொத்து விவரம் (Schedule) பகுதியில் நம்முடைய இடம் எந்த சர் வே எண்ணில் வருகிறது என குறிக்க ப்பட்டிருக்கும்.இவை அனைத் திலுமே உரிமையாளர் பெயர் மாற்றப்பட வே ண்டும் என்பது மனதில் கொள்வது மி கவும் அவசியம்.
வருவாய்த் துறையில் நம்முடைய ஆவணங்களைப் பெயர் மாற்றம் செய்யத் தவறிவிட்டால் என்னவா கும்?பட்டா பெயர் மாற்றம் செய்யாவிட்டால் வருவாய்த் துறையின்
ஆவணங்களின் படி நீங்கள் உரிமையாளர் அல்ல. பட்டா யார் பெயரில் இருக் கிறதோ அவர்தான் உரிமை யாளர். ஒரு வேளை அரசா ங்கம் நம்முடைய நிலத்தை கையகப்படுத்தினால், அதற் கான இழப்பீ ட்டுத் தொகை பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்களுக்கு வழங்கப்படும்.
Category: துனுக்குகள்


0 comments