.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஏர்-இந்தியாவைத் தனியார்மயமாக்கும் எண்ணம் அரசுக்கு கிடையாது: அஜித் சிங் அறிவிப்பு!

Unknown | 9:31 PM | 0 comments

புதுடெல்லி, அக்.7-

ஏர் இந்தியா நிறுவனத்தின் பெருகி வரும் நிர்வாக செலவுகளும், லாபமற்ற வர்த்தக நடைமுறைகளையும் கருத்தில் கொண்டு இந்நிறுவனம் தனியார் வசம் அளிக்கப்படலாம் என்று சமீபத்தில் சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜித் சிங் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சினரிடமிருந்து பெருத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து ஏர் இந்தியாவைத் தனியார் மயமாக்கும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்று நேற்று மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஏர்-இந்தியா நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதில் அரசுக்கு ஏற்படும் பிரச்சினைகளை குறிப்பிட்ட அஜித் சிங், விமானப் போக்குவரத்து வர்த்தகம் என்பது கடுமையான போட்டிகள் நிறைந்த ஒன்று என்பதை அந்நிறுவனத்தின் நிர்வாகமும், ஊழியர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்றார். திட்டமிட்டபடி, இந்த வருடத்தில் இந்நிறுவனத்திற்கு அளிக்கப்படும் 32,000 கோடியைத் தவிர மேற்கொண்டு அந்நிறுவனத்திற்கு அரசின் நிதி உதவி கிட்டாது. அவர்களே சமாளிக்கத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மூலதனம் அதிகம் தேவைப்படும் இந்த வர்த்தகத்தின் லாபங்கள் மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை ஒன்றினை நடைமுறைப்படுத்தாமல் பொது சொத்தினை விற்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சியினர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக அஜித்சிங்கிடமிருந்து இந்த மறுப்பு அறிக்கை வெளிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இது ஒரு நுணுக்கமான மற்றும் தீவிரமான பிரச்சினையாகும். இது குறித்து அரசாங்கம் முறையான விவாதங்களை மேற்கொண்டு எதிர்க்கட்சியினரின் கருத்துகளையும் கேட்டறிதல் வேண்டும் என்று பிஜேபி கட்சியின் மூத்த தலைவரான ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்தார்.

தேசிய நலன்களுக்கு எதிரான ஒரு பேரழிவு நடவடிக்கையை எடுக்க வேண்டாமென்று சிபிஐ தலைவர் டி.ராஜா கூறினார். உள்நாட்டு விமானப் போக்குவரத்துக் கொள்கையை கொண்டுவருவதாக அரசு தெரிவித்திருந்தபோதிலும் இன்னும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். கோடிக்கணக்கான தொகை செலவிடப்பட்டு சென்னை, கொல்கத்தா விமான நிலையங்கள் சீரமைக்கப்பட்டு பின்னர் தனியார்வசம் விடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். 

தேர்தல்கள் வரவிருப்பதால் இதுபோன்ற முடிவுகள் புதிய அரசு அமைக்கப்பட்டபின் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஏர்-இந்தியா நிறுவனம் அமைச்சர்கள் குழுவின் சொத்தல்ல, இந்திய மக்களின் சொத்து என்றும் இந்திய தொழிற்சங்க சிபிஎம் இணைந்த தொழிற்சங்க மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1