.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

அரும்பாவூர்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தகோரி ம.ம.க. நடத்திய ஆர்ப்பாட்டம்!!

Unknown | 2:43 PM | 0 comments

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகளுடன் 24 மணி நேரம் செயல்படக்கூடிய தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையாக மாற்றக்கோரி மனித நேயமக்கள் கட்சி சார்பில் 05.10.2013 அன்று அரும்பாவூர் பாலக்கரை பகுதியில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ம.ம.க. நகரச்செயலாளர் ஷாஜஹான் தலைமை வகிக்க மாவட்டத்தலைவர் மீரா மொய்தீன், மாவட்டத்துனைச் செயலாளர் ஜமால் முஹம்மது ரஷாதி,நகரத்தலைவர்- நிஜாமுதீன், தமுமுக ஒன்றியச்செயலாளர் முஹம்மது உஸ்மான் அலி,ம.ம.க ஒன்றியச்செயலாளர் சஃபியுல்லா, நகர துனைசெயலாளர் முஹம்மது சல்மான் ஆகியோர்
 முன்னிலை வகித்தனர்.
அரும்பாவூர் வனிகர் நல சங்கத்தலைவர் ஜெகநாதன்,வனிகர் நல முன்னேற்றசங்க செயலாளர் இள்ங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலளர் ராஜேந்திரன்,மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச்செயலாளர் ரமேஷ்,விடுதலை சிறுத்தைகள் மாவட்டத்துனைச்செயலாளர் ராஷித் அலி,தே.மு.தி.க நகரச்செயலாளர் மணிவண்ணண்,த.மு.மு.க மாவட்ட மாணவரணிச் செயலாளர் முஹம்மது இலியாஸ் அலி , ம.ம.க. மாவட்டச் செயலாளர் சுல்தான் மொய்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.முன்னதாக மாணவர் இந்தியா செயலாளர் முஹம்மது அப்பாஸ் வரவேற்க்க தொண்டரணிச் செயலாளர் நவாஸ் நன்றி கூறினார்.திரளான பொதுமக்களும் ம.ம.க வினரும் பங்கேற்றனர்.இப்போராட்டம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1