சவூதி வாழ் இந்தியர்கள்பணம் அனுப்புவதில் முதலிடம்!
உலக வங்கி வெளியிட்டுள்ளபுள்ளி விவரம் வாயிலாக இதுதெரிய வந்துள்ளது.கடந்த ஆண்டில் சவுதிஅரேபியாவில் இருந்து 840கோடி டாலரை பெற்று இந்தியாமுதலிடத்தை பிடித்தது. எகிப்து(570 கோடி டாலர்) மற்றும்பாகிஸ்தான் (300 கோடி டாலர்)அன்னியச் செலாவணியைபெற்று முறையே இரண்டாவதுமற்றும் மூன்றாவது இடங்களில்உள்ளன.
சவூதி அரேபியாவில் கச்சாஎண்ணெய் விலை அதிகரிப்புமற்றும் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக நகரங்கள் வளர்ச்சி அடைந்துவருகின்றன. இதன் காரணமாகஅந்நாட்டிற்கு வெளிநாட்டுதொழிலாளர்கள் தேவைஅதிகரித்துள்ளது.சர்வதேச அளவில்வெளிநாடுகளில் பணம்பெறுவதில் வளரும் நாடுகளின்பங்கு பெரிய அளவில் உள்ளது.2012 ஆண்டில் இந்நாடுகளின்பங்கு 75.8 சதவீதமாக (40,100கோடி டாலர்) உள்ளது. இது நடப்புஆண்டில் 6.7 சதவீதம்அதிகரித்து 42,700 கோடிடாலராக உயரும் எனமதிப்பிடப்பட்டுள்ளது.
இதில்இந்தியா, சீனா மற்றும்பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள்அதிகளவில் பணத்தை பெறும்எனவும் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டில் இந்தியா6,940 கோடி டாலரும், சீனாமற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் முறையே 6,020 கோடிடாலர் மற்றும் 2,450 கோடிடாலரும் பெற்றுள்ளனர்
Category: வளைகுட செய்தி

0 comments