உ.பி.: முசாபர் நகரில் மீண்டும் கலவரம் வெடித்தது - 3 பேர் பலி!
லக்னோ, அக்.31-
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் ஒரு பெண்ணை கேலி செய்தது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.
பிறகு அது பெரும் மத கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டதில் 62 பேர் பலியானார்கள். முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் சூறையாடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டது.
அவர்களில் சுமார் 40 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். ராணுவத்தின் தீவிர ரோந்து காரணமாக தற்போது அந்த மாவட்டத்தில் அமைதி திரும்பியது. நீடித்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதையடுத்து கடந்த மாதம் 20ம் தேதி முதல் அங்கு இயல்புநிலை திரும்பியது.
கலவரம் நடந்த பகுதிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்க ஆறுதல் கூறினர்.
கலவரத்தினால் ஏற்பட்ட பாதிப்பு என்ன? பொருள் இழப்பு எவ்வளவு? என்பது தொடர்பாக கணக்கெடுக்கும்படி மாவட்ட கலெக்டருக்கு முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்த அறிக்கையின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6 கோடியே 84 லட்சம் ஒதுக்கி அகிலேஷ் யாதவ் ஆணை பிறப்பித்தார்.
அசையும் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு தக்கவாறு ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எனவும் அசையா சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு தக்கவாறு ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் மற்றும் ரூ.1 லட்சத்துக்கு மேல் எனவும் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரத்து 800 குடும்பங்கள் மீண்டும் தங்கள் சொந்த வீடுகளுக்கு திரும்பி செல்ல பயந்தபடி பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளன.
அரசு அதிகாரிகள் எவ்வளவோ முயன்றும் நாங்கள் திரும்பி அந்த இடத்திற்கு போக மாட்டோம் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று நிலம், வீடு போன்றவற்றை வாங்கி, தங்களின் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பாக உ.பி. பொதுப்பணி துறை மந்திரி ஷிவ்பால் யாதவ் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் பரிந்துரையை ஏற்று கலவரத்தால் இடம் பெயர்ந்த ஆயிரத்து 800 குடும்பங்களுக்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி. அரசு அறிவித்தது. இந்நிலையில், முசாபர் நகர் மாவட்டம் புதனா பகுதியில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்தது.
சென்ற மாதம் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்து இங்குள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருந்த அஜ்மல் (22), மெஹர்பான் (21), அப்ரோஸ் (20) ஆகியோர் நேற்றைய கலவரத்தில் பலியானதாக முசாபர் நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் குஷால் ராஜ் தெரிவித்தார்.
இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Category: மாநில செய்தி

0 comments