.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி.களத்தூர்-இனாம்அகரம் இடையே சாலை பணியை விரைவாக முடிக்க வேண்டுகோள்!

Unknown | 9:53 PM | 0 comments




வேப்பந்தட்டை, அக்.26-
வேப்பந்தட்டை அருகேயுள்ள வி.களத் தூர்-இனாம்அகரம் இடையே ஆமை வேகத் தில் நடைபெறும் சாலை பணியை விரை வாக முடிக்க வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ள னர்.
முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத் துள்ள வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பலர் இணைந்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியுள்ள தாவது:- வி.களத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளியில் வி.களத்தூர், இனாம் அகரம், திருவாலந் துறை, ஆகிய ஊர்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து பாதிப்பு
இந்நிலையில் வி.களத்தூர்- இனாம் அகரம் இடையே உள்ள சுமார் மூன்று கிலோ மீட்டர் சாலை சீரமைப்ப தற்காக கடந்த மூன்று மாதத் திற்கு முன்பு பொக்ளின் எந்திரம் மூலம் தோண்டி போடப்பட்டது. இதனால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப் பட்டது. மாணவ-மாணவியர்கள் சைக்கிளில் கூட பள்ளிக்கு வரமுடியாத நிலை ஏற் பட்டுள்ளது.
மேலும் சாலை முழுவதிலும் ஜல்லி கற்கள் தோண்டி போடப்பட்டுள்ளதால் மாணவ-மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கே மிகுந்த சிரமப் பட்டு வருகின்றனர்.
விரைவாக முடிக்க கோரிக்கை
இதேநிலையிலேயே கடந்த மூன்று மாதங்களாக சாலைப் பணி ஏதும் நடை பெறாமல் உள்ளது. சாலைப் பணி செய் வதற்கு தேவையான ஜல்லி கற்கள் கூட இதுவரை கொண்டு வந்து நிரப்பப் பட வில்லை. இதனால் இன் னும் சாலைப்பணி முடிக்க எத்தனை மாதங்கள் ஆகுமோ என்ற அச்சம் மாணவ- மாண வியர்களிடத்திலும், பொது மக்களிடமும் எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரி களிடத்தில் பலமுறை முறை யிட்டும் எந்தவிதமான நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
எனவே மாணவ- மாணவி யர்களின் நலன் கருதி வி.களத்தூர்-இனாம்அகரம் சாலை செப்பனிடும் பணியை விரைவாக முடிக்க சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1