.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.மகேஷ் அதிரடி மாற்றம்!!

Unknown | 10:03 PM | 0 comments

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில், கள்ளச்சாரயம் விற்பனை தடுக்காமல், போலீஸார் தூக்கத்தில் உள்ளதாக, "காலைக்கதிர்' நாளிதழில், நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட போலீஸ் எஸ்.பி., மகேஷ், தேனி மாவட்டத்துக்கு, அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராம பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது குறித்தும், விற்பனை செய்யப்படுவது குறித்தும், "காலைக்கதிர்' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.
இது குறித்து, மாவட்ட போலீஸ் எஸ்.பி., மகேஷிடம், உயரதிகாரிகள் விசாரித்ததில், எஸ்.பி., மகேஷ், பணியில் மெத்தனப்போக்காக இருந்ததும், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை தடுக்க தவறியதும் தெரியவந்தது. அதையடுத்து, எஸ்.பி., மகேஷ், தேனி மாவட்டத்துக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டதாக, பெயர் வெளியிட விரும்பாத உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1