பெரம்பலூர் உள்பட 7 மாவட்டங்களில் ரேஷன் பொருள் கடத்தலா? தொலைபேசியில் புகார் தரலாம்!!
பெரம்பலூர் அக்.12:
பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது தெரிந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு டிஎஸ்பி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
திருச்சி, அரியலு�ர், பெரம்பலூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசி பொருட்களை வெளி சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது சட்டப்படி குற்றமாகும். எனவே ரேஷன்கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல் கிடைத்தால் பொதுமக்கள் இது குறித்து தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் பிரிவின் டி.எஸ்.பி. சீனிவாசனை 92451 76204 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தகவல் தரும் பொதுமக்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். நாகை, திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன்பொருட்கள் கடத்தப்பட்டால் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனை 94436 59745 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் பிரிவு டி.எஸ்.பி. சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி


0 comments