.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூரில் அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி-பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு!!

Unknown | 10:34 PM | 0 comments

பெரம்பலூர், செப்.15:
பெரம்பலூரில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடந்த சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் தரேஸ் அஹமது பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 105வது பிறந்தநாளையொட்டி தமிழ் நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்டது. போட்டியை டிஆர்ஓ சுப்ரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்களும்,100 மாணவிகளும் கலந்து கொண்டனர்.
13 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான போட்டி யில் பெரம்பலூர் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிரசாத் முதலிடத்தையும், கேந்தரிய வித்யாலயா பள் ளியைச் சேர்ந்த நிதிஷ்ராஜ் இரண்டாமிடத்தையும், பேரளி அரசு மேல்நிலைப் பள்ளி குணசேகர் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 13 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி சௌந்தர்யா முதலிடத்தையும், பெரம்பலூர், புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாகப்பிரியா இரண்டாமிடத்தையும், புனித தோமி னிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிவேதா மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் தந்தை ரோவர் மேல் நிலைப் பள்ளியைச்சேர்ந்த தீபன்ராஜ் முதலிடத்தையும், சிறுவாச்சூர் அரசுமேல்நிலை பள்ளியைச்சேர்ந்த மாதேஷ் இரண்டாமிடத்தையும், பெரம்பலூர் அரசுமேல்நிலைப் பள்ளியைச்சேர்ந்த சிவகுமார் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
15 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான சைக்கிள் போட்டியில் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலை பள்ளி குகனேஷ்வரி, தந்தைரோவர் மேல்நிலைப்பள்ளி சிவகாமசுந்தரி இரண்டாமிடத்தையும், புனிததோமினிக் பெண்கள் மேல் நிலைப்பள்ளி லதா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.
17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான போட்டி யில் அரசு மேல்நிலைப் பள்ளி ஸ்ரீதர், தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி கோபாலகிருஷ்ணன், செஞ்சேரி வித்யாஷ்ரமம் பள்ளி மாரிமுத்து முறையே முதல் 3 இடங்களையும், பெண்களுக்கான போட்டியில் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஜானகி முதலிடத்தையும், புனிததோமினிக் பெண்கள் மேல்நிலை பள்ளி பிரின்சி, பிரியா ஆகியோர் 2வது, 3வது இடங்களைப் பிடித்தனர்.
பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்றவர்களுக்குகலெக்டர் தரேஸ்அஹமது பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சைமன்ராஜ் வரவேற்றார். தடகள பயிற்றுநர் கோகிலா நன்றி கூறினார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1