.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூரில் வேகமாக வந்த கார் மோதி வேன் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது!!!

Unknown | 9:25 PM | 0 comments


பெரம்பலூர், செப்.12:
பெரம்பலூரில் வேகமாக வந்த கார் மோதி வேன் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதில் 11 பேர் காயமடைந்தனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் அழகன்(59). பில்டிங் கான்ட்ராக்டர். இவர் மதுரை, சென்னையில் கட்டுமான பணியில் மேற்கொண்டு வருகிறார். இவர் நேற்று காலை மனைவி தனபாக்கியத்துடன் காரில் மதுரையிலி ருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். சென் னையை சேர்ந்த பாலாஜி(31) காரை ஓட்டினார்.
இதேபோல் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சொரத்தூரை சேர்ந்த சிலர் நேற்று காலை வேனில் பெரம்பலூர் மாவட்டம் கல்பாடியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தனர். கோட்டாத்தூரை சேர்ந்த பாபு(27) வேனை ஓட்டினார்.
பெரம்பலூர் துறைமங்கலம் ஏரிக்கரை பகுதியில் திருச்சி&சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இடதுபுறமாக வேனை திருப்பியபோது, மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்ற அழகனின் கார், வேன் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் வேன் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்தது. இதனால் வேனில் இருந்தவர்கள் அலறினர். அருகில் இருந்தவர்கள் வந்து வேனுக்குள் இருந்தவர்களை மீட்டனர். வேனில் இருந்த ஜெயராஜ்(48), அவரது மனைவி இந்திரா(40), மகள்கள் ரேகா(22), மகாதேவி(25), இவரது மகள் பார்வதி(இரண்டரை மாதம்), செல்வராஜ்(63), சரோஜா(40), ராஜலட்சுமி(35) ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காருக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் பயணம் செய்த அழகன், மனைவி தனபாக்கியம், டிரைவர் பாலாஜி ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த 11 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீப்பிடித்த வேன் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். மேலும் இதுபற்றி பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்புதீன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1