.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத உதவும் மசூதி நிர்வாகம்!

Unknown | 4:25 PM | 0 comments

சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் மக்கா மசூதி நிர்வாகத்தால் நடத்தப்படும் அழகிய கடன் அறக்கட்டளை எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்.
ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத மாணவர்களை தயார் செய்து இலவச பயிற்சியும் அளித்து வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்த அறக்கட்டளையின் நிறுவனர் மெளலானா ஷம்சுதீன் காசிமி, “திறமை இருந்தும் அரசியல் அதிகாரங்களால் மூடப்பட்ட கதவை திறக்கும் முயற்சியே எங்கள் அமைப்பின் சேவை. 2012 ல்  30 மாணவர்களுக்கு பயிற்சி அளித்தோம். இவ்வருடம் 40 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.
மேலும், இதில் 90 சதவீதத்தினர் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள், இவர்களுக்கு இலவச உணவு, விடுதி மற்றும் பயிற்சி அளிக்கிறோம். மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் வரை இதற்கு செலவாகிறது” என்று அவர் தெரிவித்தார்.
அதன்படி J.மீராசாகிப் என்ற பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்  UPSC மற்றும் TNPSC குரூப்-1 தேர்வுகளில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்று 2014 ஆம் ஆண்டு நடைபெறும் IAS தேர்வு எழுதவுள்ளார்.
தொடர்புடைய காணொளி

மேலும் ஹெச் .அக்பர் அலி என்ற மாணவர் UPSC முடித்துள்ளார். மற்றும் என்.ஜஸீம் என்ற மாணவர் முக்கிய தேர்வுகளுக்கு தயாராக உள்ளார். இந்நிலையில்,  மாணவிகளுக்கும் தனி வகுப்பு தொடங்க திட்டமிட்டிருப்பதாக  மெளலானா ஷம்சுதீன் காசிமி தெரிவித்துள்ளார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1