.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி. களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்!

Unknown | 11:00 PM | 0 comments

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை  அருகேயுள்ள வி. களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் 150 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பேசியது: தமிழக அரசு கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது என்றார். 
மேலும் பேருந்து பயண அட்டை, 2 செட் சீருடைகள், வழங்க உத்தர விட்டுள்ளார். கல்லூரி மாணவ, மாணவியர் களுக்கு படித்து முடிக்கும் முன்பே வேலை பார்க்க முழுத்தகுதியான நிலையில் இருப்பதற்காகவும், பொருளா தார முன்னேற்றம் பெறும் வகையிலான கல்வியை கற்க ஏதுவாக முதல்வர் மடிக் கணினியை விலையில்லா மல் அளித்து வருகின்றார். ஆகவே மாணவ மாணவியர்கள் தமிழக முதல்வர் வழங்கும் சலுகைகளை முழுமையாக பெற்று பயன் அடைந்து நன்றாக படிக்க வேண்டும்.

விழாவில், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன், முதன்மைக் கல்வி  அலுவலர் ஆர். மகாலிங்கம், மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாசலபதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ரா. செல்வராணி, ஊராட்சித் தலைவர் நுரூல்குதா இஸ்மாயில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கர் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் சுந்தரம் நன்றி கூறினார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1