.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

இந்தியாவிற்கு ரூ.25,44,620 கோடி கடன்!

Unknown | 7:00 PM | 0 comments



புதுடெல்லி : இந்தியாவின் வெளிக்கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 2012,13ல் வெளிக்கடன் அதிகளவில் உயர்ந்துள்ளது. நடப்பு கணக்கில் உயர் பற்றாக்குறையை சரி செய்வதற்காக, வெளியில் அதிகளவில் கடன் வாங்கப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடனான வெளிக்கடன் விகிதம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறுகியகால கடன்கள் அதிகரித்துள்ளது. ஆனால், சலுகையுடன் கூடிய கடன்களின் அளவு முன்பை விட குறைந்துள்ளது. முந்தைய ஆண்டைக்காட்டி லும், கடந்த நிதியாண்டில் வெளிக்கடன் அதிகரித்ததற்கு, உள்நாட்டு உற்பத்தி குறைந்தது, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை முக்கிய காரணம் என்று மத்திய வருவாய்அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் இறுதி வரையிலான 2012,13ம் நிதியாண்டில், இந்தியாவின் வெளிக்கடன் ரூ.25,44,620 கோடியாக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இது ரூ.22,54,042 கோடி. முந்தைய நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தியுடனான வெளிக்கடன் 19.7%அதிகரித்த நிலையில், கடந்த நிதியாண்டில் 21.2% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறுகிய காலகடன்கள், வர்த்தக கடன்கள் அதிகரிப்பால் வெளிக்கடன் உயர்ந்துள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1