பெரம்பலூரில் சிறப்பு காவல் இளைஞர் படை உறுப்பினர் பதவிக்கு 168 விண்ணப்பங்கள் விநியோகம்
பெரம்பலூரில், தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை உறுப்பினர் பதவிக்கு 168 விண்ணப்பங்கள் திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விண்ணப்ப விநியோகம் நிகழ்ச்சியை தொடக்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜே. மகேஷ் மேலும் கூறியது:
சிறப்பு காவல் இளைஞர் படை உறுப்பினர் பதவிக்கு தேர்வுக்கான விண்ணப்பத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். நேரடியாக விண்ணப்பத்தை பெற இயலாதோர்
http://www.tnusrb.tn.gov.in/tnspyb/perambalur.pdf ஆகிய இணையத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் அனுப்பும்போது, தேர்வு கட்டணம் ரூ.100க்கான வங்கி வரைவோலையையும் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் செப். 30ம் தேதி வரை விநியோகிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக். 1ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கொடுக்க வேண்டும். மேலும், விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 04328- 224910, 224962 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியின்போது, துணை கண்காணிப்பாளர் சவுந்திரராஜன், தனிப்பிரிவு ஆய்வாளர் கோபாலசந்திரன் உள்ளிட்ட காவல் துறையினர் உடனிருந்தனர்.
Category: வேலைவாய்ப்பு
0 comments