10க்கு ஒரு லிட்டர் தண்ணீர் அம்மா மினரல் வாட்டர் திட்டம் 15ல் முதல்வர் துவக்கி வைக்கிறார் !!
சென்னை: தமிழக அரசு சார்பில், ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீர் ரூ.10க்கு விற்பனை செய்யும் ‘அம்மா மினரல் வாட்டர் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா வரும் 15ம் தேதி துவக்கி வைக்கிறார்.தமிழகத்தில், குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் ‘அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.
அதன்படி முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் மினரல் வாட்டர் குடிநீர் தயாரிக்கும் வகையில், ‘அம்மா மினரல் வாட்டர்‘ உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. மினரல் வாட்டர் தயாரிப்பதற்கு தேவையான இயந்திரங்கள் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் திறன் கொண்ட தண்ணீர், பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு நீண்ட தூரம் செல்லும் அரசு பஸ்களிலும், சென்னையில் உள்ள பஸ் நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள புறநகர் பஸ் நிலையங்களிலும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில்வே நிர்வாகத்தால் 15 ரூபாய்க்கும், தனியார் நிறுவனங்களால் 20 ரூபாய்க்கும் விற்கப்படும் ஒரு லிட்டர் குடிநீர், அரசு போக்குவரத்து கழக நிறுவனங்களினால் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அண்ணா பிறந்த தினமான வருகிற 15ம் தேதி முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைக்க திட்டமிட்டுள்ளார். இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து மேலும் ஒன்பது இடங்களில் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையங்கள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Category: மாநில செய்தி

0 comments