இந்திய தபால் துறை ஆரம்பிக்க்ப் போகும் வங்கிகள்!
பொதுத்துறை வங்கிகளுக்கு போட்டியாக இந்திய தபால் துறையும் வங்கி வர்த்தகத்தில் ஈடுபட உள்ளது. இதற்காக உரிமம் கோரி ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்துள்ளது.இந்திய தபால் துறை சார்பில் இந்த நிதியாண்டில் ரூ. 1,300 கோடிமதிப்பில் , இந்திய தபால் வங்கியினை நாடு முழுவதும் துவக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த நிதியாண்டில் புதிய வங்கிகளை துவக்க உரிமம் கோரி பல்வேறு நிறுவனங்களும், ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம் செய்துள்ளன. அதனுடன் இந்திய தபால்துறையும் உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளது. உரிமம் கிடைத்ததும், முதல்கட்டமாக தலா ரூ. 500 கோடி முதலீட்டில் 50 கிளைகளையும், அடுத்த ஐந்தாண்டுகளில் 150 கிளைகளையும், படிப்படியாக நாடு முழுவதும் ஊரக மற்றும் புறநகர் பகுதிகளிலும், திறக்கப்பட உள்ளன.

ரிசர்வ் வங்கி கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டுவிட்டால், மத்திய அமைச்சரவை ஒப்புதல் வாங்கிவிட்டு வங்கியை உடனடியாக தொடங்க் தபால் துறை திட்டமிட்டுள்ளது. தற்போது அனைத்து சாதாரண மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைப்பதில்லை என்பதால் தபால் துறை மூலம் புதிய வங்கிகளை தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதித்தால் மக்களுக்கு வீட்டு வாசலிலேயே வங்கிச் சேவை கிடைக்கும் என்று . எதிர்பார்க்கப் படுகிறது

மேலும் பொதுத்துறை வங்கிகளுக்கு போட்டியாக நெட் பேங்கிங் முறையும் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த வங்கியானது, மத்திய நிதித்துறை, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , பிரதிநிதிகளை இயக்குனர்களாக கொண்டு சுயாட்சி பெற்ற அமைப்பின் கீழ் செயல்படும்.
Category: மாநில செய்தி

0 comments