சார்ஜாவில் 20 மில்லியன் தங்கம் கொள்ளை: இரு இந்தியர்கள் உட்பட மூவர் கைது!

சார்ஜாவில் கடந்த சில நாட்களாக புலனாய்வு செய்யப்பட்டு வந்த 20 கிலோ தங்கம் மற்றும் தங்க நகை கொள்ளை தொடர்பாக துப்புத் துலங்கியது என்று கூறியுள்ளது போலீஸ். அதையடுத்து 3 ஆசிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையிடப்பட்ட தங்கத்தின் மதிப்பு, Dh20 மில்லியன்!
கடந்த சில தினங்களாக துப்புத் துலக்கலில் ஈடுபட்டிருந்த சார்ஜா போலீஸ், கொள்ளையடித்தவர்களை அடையாளம் கண்டுகொண்டது. ஆனால், அவர்களது இருப்பிடத்தை அறிய முடியவில்லை. கடந்த இரு தினங்களாக, அவர்களது இருப்பிடத்தை அறியும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டிருந்தன.
தற்போது, இந்த மூவரின் இருப்பிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது சார்ஜா போலீஸ்.
அவர்களை தேடிக்கொண்டிருந்தபோது, பொதுப்படையாக ‘ஆசிய நாட்டவர்கள்’ என்றே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டபின், மூவரில் இருவர் இந்தியர்கள், ஒருவர் பாகிஸ்தானி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கொள்ளையடித்த Dh20 மில்லியன் மதிப்புள்ள தங்கமும், கைப்பற்றப்பட்டுள்ளது.

Category: துபாய்

0 comments