பெரம்பலூரில் படித்த இளைஞர்களுக்கு நாளை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது..
பெரம்பலூர், ஜூலை 26:
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பிரபல நிறுவனங்களான டிவிஎஸ், கேப்பிடல் சிஎன்சி, பைன்பிட், யுரேகா போர்பஸ் லிமிடெட், உணவு மேலாண்மை மற்றும் 2 சக்கர, 4 சக்கர வாகனம் பழுது நீக்கப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் நேரடி வேலைவாய்ப்பிற்கும், தொழிற்பயிற்சிகளுடன் கூடிய வேலைவாய்ப்பை உறுதி செய்திடும் வகையில் நாளை (27ம் தேதி)கலெக் டர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள். முகாமிற்கு வரும் போது, இது குறித்த விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தில் பூர்த்தி செய்து கொண்டு வர வேண் டும். இதுதொடர்பான மேலும் விபரங்களை அறிந்துகொள்ள 9488044623, 8012561268 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தக வலை பெரம்பலூர் கலெக் டர் தரேஸ்அஹமது தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி
0 comments