வி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் சஹர் விருந்து சிறப்பாக நடைபெற்றது
இன்று 31-7-13 வி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் (ஐடியல் பள்ளி அறுகில்) சஹர் விருந்து சிறப்பாக நடைபெற்றது. இவ்விருந்தினை சில நபர்கள் ஒன்றுசேர்ந்து சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். உணவு வகைகள் ஏராளம் விருந்திற்காக தயார் செய்யபட்டு இருந்தது. விருந்தில் பரிமாறுவது வந்தவர்களை கவனிதுகொள்ளுவது போன்ற வேலைகளை வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர் சங்கத்து உறுப்பினர்கள் சிறப்பாக செய்தனர். விருந்து அதிகாலை 2.30 முதல் 4.30 மணி வரை நடைபெற்றது. விருந்தில் ஊர் பொது மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தி
BY ஜியாவுல் ஹக்
Category: உள்ளுர் செய்தி
0 comments