ரம்ஜானை முன்னிட்டு 3 மில்லியன் குழந்தைகளுக்கு இலவச ஆடைகள்: துபாய் மன்னர் வழங்கினார்.
துபாய், ஆகஸ்ட் 01.
ஐக்கிய அரபுக் குடியரசின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், துபாயின் அரசியல் அமைப்பின் மன்னராகவும் உள்ளார். இவர் ரம்ஜானை முன்னிட்டு, இந்தியா உள்ளிட்ட உலகெங்கும் வறுமையில் வாடும் ஒரு மில்லியன் குழந்தைகளுக்கு ஆடை வழங்கும் திட்டத்தினைத் தொடங்கினார்.
இந்த மாதம் 11-ம்தேதி துவங்கப்பட்ட இந்த மனித நேயத்திட்டம் கடந்த திங்களன்று முடிவடைந்தது. அன்றுதான் ஐக்கிய அரபுக் குடியரசை நிறுவிய ஷேக் சயீத் பின் சுல்தானின் ஒன்பதாவது நினைவு நாளாகும். மேலும், இந்த நாள் சயீத் மனிதநேய நாளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபுக் குடியரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்ட குறிப்பின்படி, ஷேக் முகமதுவின் நன்கொடை பெறுபவர்கள் எண்ணிக்கை ஆரம்பத்தில் 1.5 மில்லியனாக இருந்ததாகவும் பின்னர் அது இரட்டிப்பாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராள மனம் கொண்ட ஐக்கிய அரபுக் குடியரசின் மக்கள் இந்தப் பிரச்சாரத்தில் பங்கு கொண்டதன் விளைவாக இந்தப் புனிதத் திருநாள் மூன்று மில்லியன் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதன்மூலம், அறத்தொண்டுகளின் தலைநகராக ஐக்கய அரபுக் குடியரசு தன்னை நிலை நிறுத்திக் கொள்கின்றது என்று மன்னர் ஷேக் முகமது தெரிவித்தார்.

Category: துபாய்
0 comments