பெரம்பலூரில் மடிக்கணினி பழுது நீக்கல் (laptop service)இலவச பயற்சி.
.
பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச மடிக்கணினி பழுது நீக்குதல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த மையத்தின் செய்திக்குறிப்பு:
இந்த பயிற்சி மையத்தில் ஜீன் 24 முதல் 10 நாள்களுக்கு மடிக்கணினி பழுது நீக்குதல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. 18 முதல் 45 வயதுக்குள்பட்ட, 10-ம் வகுப்பு படித்த, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பயிற்சி காலத்தில் மதிய உணவு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள், பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள பயிற்சி மைய இயக்குநரிடம் பெயர், வயது, முகவரி, கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.
தொடர்புக்கு: 04328- 277896.
Category: மாவட்ட செய்தி

0 comments