சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் அறிவிப்பு! .
பெரம்பலூர்,ஜூன் 14:
சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக் டர் தரேஸ் அகமது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர் சீக்கியர் மற்றும் பார்சி வகுப்பை சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2013&14ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் (ஒன்றாம் வகுப்பு நீங்கலாக) 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நலவாரியங்கள் மூலம் 2013&14ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது. குடும்பத்தில் அதிகபட்சம் இருவருக்கு மட்டும் இக்கல்வி உதவித்தொகை வழங்கப் படும்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப் படும். விண்ணப்பங்களை
என்ற இணையதள முகவரியிலிருந்து படியிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் ஆகஸ்ட் 15ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிலையங்கள் மாணவ, மாணவிகளிடமிருந்து பெற்ற கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களைச் சரிபார்த்து அதற்கான கேட்பு பட்டி யலை உரிய படிவத்தில் பதிந்து கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் வரும் ஆகஸ்ட் 22ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி


0 comments