.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

I.T.I. இல் சேர விருப்பமா?

Unknown | 9:04 PM | 0 comments


.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ( ஐ.டி.ஐ.,) சேர்வதற்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 62 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அனைத்து இடங்களும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில், மாவட்ட கவுன்சிலிங் மூலம் நடைபெறும் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி
ஆகஸ்டில் தொடங்கும் இப்படிப்புகளில் சேர்வதற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி, அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 50 ரூபாயை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக, ஏதேனும் ஒரு அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு அனுப்பி விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் குறிப்பேட்டை பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு மாவட்டத்திற்கு ஒரு விண்ணப்பம் மட்டும் சமர்ப்பித்தால் போதும். ஒவ்வொரு மாவட்டத் திலும் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அந்தந்த மாவட்ட கவுன்சிலிங் மூலமே மாணவர் சேர்க்கை நடக்கும்.
பிற மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் ஜூன் 29.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1