மோடி பிரதமரானால் என்ன நடக்கும்?
" பாரத மாதாக்கி ஜே,'", "ஓம்.. ஓம்.. காளி' " "'ஜெய் ஜெய் காளி'" என்று ஓங்காரமிடும் இந்துத்துவ பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் முதல்வர் திருமண உதவித் திட்டத்தில் திருமணம் செய்ய முன்வந்த 350 பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை நடத்தி,தனது கொடூர வக்கிரத்தை காட்டி,பெண்களை பி.ஜே.பி-மதிக்கும் லட்சணத்தை பறை சாற்றியுள்ளது!
ஆற்றுக்கும்,மாட்டுக்கும் பெயர் வைத்து பெண்களைப் போற்றுவதாக கூறும் காவிக்கும்பல்கள் நிஜ வாழ்க்கையில் பெண்களை மதிப்பதில்லை! பெண்களை .இழிவுபடுத்தி,அடிமைப்படுத்தி, தனது வக்கிரங்களைத் தீர்த்துக்கொண்டு, அவர்களைக் கொடுமை செய்யத் தவறுவதில்லை என்பதையே, மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு நடந்த கன்னித்தன்மை சோதனை நிருபிக்கிறது!
" மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் "என்றான் பாரதி ! பெண்களை இழிவு செய்வதை நியாயப்படுத்தும் காவிகும்பலிடம் நாட்டை ஒப்படைத்தால் கன்னித்தன்மை சோதனையைபோல பல சோதனைகளை பெண்கள் சந்திக்க வேண்டி இருக்கும்..!
இறையாண்மை உள்ள இந்தியாவில், மத சார்பான பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்த்தது போல, "கட்டாய கன்னித்தன்மை சோதனை" என்று சட்டம் கொண்டு வந்தாலும் வருவார்கள் என்று நினைக்க தோன்றுகிறது!
இந்த லட்சணத்தில், பெண்களும்,முஸ்லிம்களும்,தலித்துகளும் அடிமைகள் என்று நினைக்கும் "இந்துமத சிந்தனையை அமலாக்க வந்துதித்த அவதாரபுருஷர் " என்று இந்துமதவாதிகளால் சித்தரிக்கப்படும் நரேந்திர மோடி, பி.ஜே.பி-யின் பிரசாரகுழு தலைவராக்கப்பட்டு இருக்கிறார். இவர் பிரதமரானால் மனுதர்மத்தை காக்க எப்படியெல்லாம் சிந்திப்பரோ என்று கவலை ஏற்படுகிறது!
"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மானிடரை நினைத்து விட்டால். " என்ற பாரதியின் பரிதவிப்பில் எவ்வளவு உண்மைகள்!
கன்னித் தன்மை சோதனை நடத்திய கயவர்களை நினைக்கும்போது, நமது நெஞ்சமும் குமுறுகிறது
Category: கட்டுரை




0 comments