இந்திய தூதரகம் மூலம் அறிய வாய்ப்பு - வேலை வாய்ப்பு முகாம் (புகைப்படங்களுடன்)
ஜித்தா,சவூதி அரேபியா -
ஜூலை 3ம் தேதிக்கு பின் கடும் நடவடிக்கை எடுக்கவிருக்கும் பட்சத்தில் சவூதி வாழ் இந்தியர்கள் இத்தகைய பிரச்சனைகளிலிருந்து மீளுவதற்காக ஜித்தாவில் உள்ள இந்திய தூதரகம் நேற்று மதியம் ஒரு மணி முதல் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.. இதில் பல்வேறு நிறுவனங்கள் கலந்துக்கொண்டு பெரும்பாலான மக்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.. இதற்கு முன்பு நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாம்களின்மூலம் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் மக்கள் பயனடைந்துள்ளார்கள்.. இதன்மூலம் சவூதி அரேபிய சட்டத்திற்கு உட்பட்டு பணியை தொடர்வதற்கும்,நாடு திரும்பவேண்டிய அவசியம் இல்லாமலும் பலருக்கு அழகிய சூழல் அமையப்பட்டுள்ளது.
ஜூலை 3ம் தேதிக்கு பின் கடும் நடவடிக்கை எடுக்கவிருக்கும் பட்சத்தில் சவூதி வாழ் இந்தியர்கள் இத்தகைய பிரச்சனைகளிலிருந்து மீளுவதற்காக ஜித்தாவில் உள்ள இந்திய தூதரகம் நேற்று மதியம் ஒரு மணி முதல் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.. இதில் பல்வேறு நிறுவனங்கள் கலந்துக்கொண்டு பெரும்பாலான மக்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.. இதற்கு முன்பு நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாம்களின்மூலம் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் மக்கள் பயனடைந்துள்ளார்கள்.. இதன்மூலம் சவூதி அரேபிய சட்டத்திற்கு உட்பட்டு பணியை தொடர்வதற்கும்,நாடு திரும்பவேண்டிய அவசியம் இல்லாமலும் பலருக்கு அழகிய சூழல் அமையப்பட்டுள்ளது.சவூதி அரசாங்கம் அறிவித்த மூன்று மாத கெடு வரும் ஜூலை 3ம் தேதியோடு முடிவடைகின்றது.. அதன்பிறகு சிறைவாசம் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்து வருகின்றது.
நேற்றைய வேலை வாய்ப்பு முகாமிற்கு பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்..
பெப்சி நிறுவனத்தின் கூலி வேலைக்கான ஆட்கள் தேந்தேடுக்கப்பட்டபோது எடுத்த படம்.
தூதரகத்தில் மூன்று டெண்டுகளாக பிரிக்கப்பட்டிருந்ததில் இதுவும் ஓன்று.
சில நிறுவனங்கள் மக்களின் தேவையை உணர்ந்துக்கொண்டு அடிமாட்டு விலைக்கும் ஆட்கள் எடுக்கப்பட்டதை காண முடிந்தது. Win-Win Situation.
விளம்பர பலகை : மொஹ்சின் ட்ரேடிங்&காண்ட்ரேக்ட் - 85 கூலி ஆட்கள் தேவை - 1200 ரியால்+தங்குமிடம்+2 வருடத்திற்கு ஒரு முறை விடுப்பு
Office Assistant, Administrator, கணினி அறிவுள்ளவர்கள் போன்றோர் தேவை ஆனால் நீங்கள் Over Qualified என்றவாறு நம்மளை வாரினார் இந்த இடத்துக்கு அப்போதைய சொந்தக்காரர் :)
இப்படியே நேராக போய்.. வலது பக்கம் திரும்பி,இடது பக்கம் திரும்பவேண்டும் என்பதுபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு அலுவலக வரைபடம் வழங்கும் காட்சி.
கிட்டத்தட்ட flex ல் செய்யப்பட்ட Offer Letter/Contract Letter
மீண்டும் வரும் வாரம் வியாழக்கிழமை(27-06-13) மதியம் 1 மணி முதல் வேலை வாய்ப்பு முகாம் ஜித்தாவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலையில்லாமல் மற்றும் கஃபீல் பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருக்கும் அதிரை சகோதரர்கள் இதை பயன்படுத்திக்கொல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
தமிழ் மற்றும் இதர இந்திய மொழிகளில் தற்போதைய சவுதி அரேபிய சட்டதிட்டங்கள் சம்மந்தமாக இந்திய தூதரகம் அறிவிக்கும் செய்திகளை அறிந்துக்கொள்ள கீழே உள்ள சுட்டியை அழுத்தி தெரிந்துக்கொள்ளலாம்..
கஃபீல் மற்றும் இகாமா பிரச்சினைகள் சம்மந்தமான மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ளவும். Tel : (00966) 0546843866, 0546843894,0546843836, 0546843746, 0546843903).
தனது கஃபீளுடைய நிருவனத்தின்கீழ் வேலை செய்ய விரும்பாமல் ஓடி வந்தவர்கள், உம்ரா மற்றும் ஹஜ் விசாவில் வந்து நாடு திரும்பாமல் தங்கி இருப்பவர்கள், கடவுச்சீட்டு இல்லாதவர்கள் மற்றும் இகாமா காலாவதி ஆனவர்களுக்கு சவுதியில் பணிபுரிய விரும்பாமல் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை இரவு, பகலாக தன்னார்வலர்கள் மூலம் இந்திய தூதரகத்தின் உதவியைக்கொண்டு செய்து கொடுக்கப்படுகின்றது. இதில் பல தமிழக தன்னார்வலர்களும் உள்ளனர்.
ஒரு கசப்பான உண்மை சம்பவம்:
சுயமாக தொழில் நடத்திக்கொண்டிருக்கும் ஒரு தமிழர் தனது தொழிலிற்கு விற்பனையாளர் (salesman) தேவைப்பட்டது. ஒரு தமிழருக்கு வேலை கொடுத்து உதவலாமே என்ற நல்லெண்ணத்தில் சில அதிரை மக்களிடமும் சொல்லிவைத்து,இறுதியாக கடந்த வாரம் இகாமா பிரச்சினையில் சிக்கி இருந்த ஒரு தமிழருக்கு வேலை மற்றும் வாகனம் கொடுத்து குதிரைக்கொம்பாக இருக்கும் கஃபாலத் மாற்றும் பிரச்சினையையும் முடித்துக்கொடுத்த பின்பு "வீட்டு நியாபகம் வந்துவிட்டது ஊருக்கு போகின்றேன்" என்று வேலைக்கு வராமல் அந்த தமிழர் கூறுவதாக வருத்தத்துடன் கூறினார்.. இன்றைய வேலை வாய்ப்பு முகாமில் இறுதியாக ஒரு வட மாநிலத்தவரை அந்த வேலைக்கு அழைத்திருக்கின்றார்..
இனியும் ஃப்ரீ விசா என்று கூறி பல லட்சங்களை வாரி இறைத்து தனக்குத்தானே குழி தோண்டிக்கொண்டு சவூதி பக்கம் வர வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரையோடு..
வசலாம்,
மு.செ.மு.மீராஷாஹ் ரஃபியா
Category: வளைகுட செய்தி









0 comments