நாளை V.களத்தூரில் "அம்மா' திட்ட முகாம் நடைப்பெற உள்ளது .

பெரம்பலூர்: நாளை அம்மா திட்ட முகாம் நடக்கும் கிராமங்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது வெளியிட்ட அறிக்கை:
பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு, அதிக சேவைகளை வழங்குவதற்காக அம்மா திட்ட முகாம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டப்படி ஒவ்வொரு வாரத்திலும் செவ்வாய்கிழமைதோறும் குறுவட்டத்திற்கு ஒரு கிராமம் வீதம், தாசில்தார் நிலையிலான அலுவலர் தலைமையில், வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களை தேடிச்சென்று, அவர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நாளை (7ம் தேதி) அரணாரை வடக்கு, களரம்பட்டி, தொண்டமாந்துறை மேற்கு, பசும்பலூர் வடக்கு, V.களத்தூர், எழுமூர் மேற்கு, அத்தியூர் தெற்கு, காடூர் வடக்கு, புஜங்கராயநல்லூர், கண்ணப்பாடி, கொளத்தூர் கிழக்கு ஆகிய, 11 வருவாய் கிராமங்களில், அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது பங்கேற்று பயன்பெறலாம்.
நாளை 07-05-2013 காலை 10 மணி முதல் V.களத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் வளாகத்தில் "அம்மா திட்டம்" பொது மக்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டுகோள்!!
Category: உள்ளுர் செய்தி

0 comments