.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

V.களத்தூரில் உழவர் பெருவிழா நடைபெற்றது.

Unknown | 4:08 AM | 0 comments

.வேப்பந்தட்டை, : வேப்பந்தட்டை அருகே உள்ள V.களத்தூரில் உழவர் பெருவிழா நடைபெற்றது. 
வேளாண் உதவி இயக்குனர் கீதா தலைமை வகித் தார்.

 ஊராட்சி மன்ற தலைவர் நூருல் ஹூதா இஸ்மாயில் முன் னிலை வகித்தார். பாரம்பரிய உணவு பொருட்களை பயன்படுத்துதல், சிறுதானிய உணவு பொருட்களை பயன்படுத்தாததால் ஏற்படும் தீமைகள், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு, நீர் ஆதாரத்தை பெருக்க பண்ணை குட்டைகள் அமைத்தலின் அவசியம் குறித்து வேளாண் உதவி இயக்குனர் பேசினார். 
தோட்டக்கலை துறை மூலம் செயல்படும் திட்டங்கள் பற்றியும், தோட்டக் கலை பயிர்களான காய்கறி பயிர்களை சாகுபடி செய்து அதிக மகசூல் எடுத்திடும் தொழில் நுட்பம் குறித்து தோட்டக்கலை அலுவலர் ஆனந்தன் பேசினார். மண்ணின் வளத்தை மேம்படுத்த ரசாயன உரங்களை குறைத்து தக்கை பூண்டு விதைப்பது குறித்தும், மண் மாதிரி எடுத்தலின் அவசியம் குறித்தும் வேளாண்மை அலுவலர் பிரேமா பேசி னார். விழாவில் பருத்தியில் பஞ்சு எடுக்கும் கருவியை பயன்படுத்தி எவ்வாறு பஞ்சு எடுப்பது, மானாவாரி மக்காசோளத்தில் வறட் சியை தாங்கி வளர பொட்டாசியம் விதை நேர்த்தி, உர செலவை குறைக்க ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் ஆகிய செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப் பட்டது. 
குழித்தட்டு முறையில் நவீன கரும்பு சாகுபடி குறித்து செயல் விளக்கமும், அதற்கு அரசு வழங்கும் சொட்டு நீர் பாசன கருவி கள் மற்றும் இலவசமாக நீரில் கரையும் உரங்களையும் பெற்று விவசாயிகள் பயனடையுமாறு கேட்டுக்கொண்டனர். இதில் துணை வேளாண் அலுவலர் பெரியசாமி உள்பட விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். வேளாண் உதவி அலுவலர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வேளாண் அலுவலர்கள் சவுந்தர்ராசன், மாரித்தேவன், அட்மா அலுவலர்கள் கல்யாணசுந்தரம், மாரிமுத்து, சுப்ரமணி ஆகியோர் செய்திருந்தனர்.

Thanks :  DINAKARAN.COM

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1