V.களத்தூரில், மழைக்கான.. சிறப்புத்தொழுகையும்.. பிரார்த்தனையும் நடைப்பெற்றது,

இன்று காலை சுமார் 9 மணிஅளவில் நமதூர் கல்லாற்றில் மழை வேண்டி
சிறப்புத்தொழுகையும்.. பிரார்த்தனையும் நடைப்பெற்றது, 

.

.


மழையின்றி பூமியில் மனிதர்கள் ஏது?
ஏன்.. எந்த உயிரினங்களும்தான் ஏது?
எனவேதான் நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே நபி தம் தோழர்களை (சகாபாக்களை) அழைத்து மழைக்கான சிறப்புத் தொழுகையும், விடா அடைமழையின் போது, மழை நிற்பதற்காக தொழுகையும் கூட்டுப்பிரார்த்தனையும் செய்ததாக அறிகிறோம்.
அந்தவகையில் நமது வி.களத்தூரிலிலும் இன்று (26.05.2012) காலை 9.00 மணிக்கு மழைக்காக சிறப்புத்தொழுகையும், பிரார்த்தனையும் நடைப்பெற்றது. கல்லாற்றில் நடந்த இந்த சிறப்புத்தொழுகையில் வி.களத்தூர் மற்றும் மில்லத்நகரைச் சார்ந்த அனைத்து இஸ்லாமியப் பெருமக்களும் கலந்துக்கொண்டு பிரார்த்தித்தனர்.
Category: உள்ளுர் செய்தி, வி.களத்தூர்

0 comments