.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Unknown | 8:47 PM | 0 comments

”தங்கள் பிள்ளைகள் டாக்டராக வேண்டும், இன்ஜினீயராக வேண் டும். பி.எட் படிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு பலப்பலகனவுகள். ஆனால். கேட்டரிங் மற்று ம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப் பைத் தேர்வு செய்வதில் பெரும்பா லானவர்களுக்கு விருப்பமே இருப்ப தில்லை. ‘சமையல் செய்யும் வேலை’ என்றே சுருக்கிப் பார்க்கின்றன ர்.
எல்லா துறைகளிலும் பெண்கள் சாதிக்கக் கிளம்பிவிட்டார்கள். ஆனா ல், அவர்களுக்கு நெருக்கமான சமை யல் துறை படிப்புகளை அவர்களும் விரும்பிப் படிப்பதில்லை. இத்தனை க்கும், உள்ளூர் ஹோட்டல்க ளில் இருந்து… சர்வதேச ஸ்டார் ஹோட்டல்கள் வரை இவர் களுக்கானதேவையும், சம்பளமும் மிக மதிப் பானது…”
- ஒரு தடவை, ‘மால்குடி’ கவிதாவிடம் பேசிக் கொண்டிருந்த போ து, அவர் ஆதங்கத்தோடு சொன்ன வார்த்தைகள் இவை.
சென்னை, சவேரா ஹோட்டலில் இருக்கும் ‘மால்குடி கிச்சன்’ ரெஸ்டாரன்ட்டின் தலைமை அதிகாரி எனும் முக்கிய பொறுப்பில் உள்ள அவரை தொடர்ந்து பேசவிட்டபோது…
”சமையல் கலை, இன்றைய நவீன சூழலில் பெரும் தொழிலாக வளர்ந்திருக்கிறது. உணவு தயாரிப்பு, சுற்றுலா, ஹோட்டல் நிர் வாகம் ஆகிய எல்லாமே ஒன்றுடன் ஒன்று கைகோத்து இயங்கும் துறைகள். எனவே, சமையல் பற்றிய படிப்புகள் இந்த எல்லா துறைகளிலும் உலக அளவில் பணி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இவற்றில் வேலைவாய்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால், நம்நாட்டில் அதைப் பூர் த்தி செய்வதில் பற்றாக்குறையே நிலவுகிறது. என் 20 வருட அனு பவத்தில், இத்துறைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை மிகமிகக்குறைவாக இருப்பதை வேதனையோ டு கவனித்துவருகிறேன். காலம்  காலமாக பெண்கள் வசம்தான் சமையலறை. ஆனால், ஹோட்டல்களின் சமையலறை தலைமை யை ஏற்க பெண்கள் முன் வராதது முரண்” என்று சொன்னார்.
இந்த விஷயத்தை அப்படியே மத்திய அரசின் சார்பில் சென்னை யில் இயங்கிவரும் ‘இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ் மென்ட்’ கல்லூரியின் முதல்வர் ராஜ மோகன் முன்பாக வைத்த போது… அவருக் கும் அதே ஆதங்கம்தான்.
”தமிழ்நாட்டில் சமையல் துறை படிப்புகளைத் தேர்ந்தெடுப்பவர்க ளின் சதவிகிதம் மிகக் குறைவாக உள்ளது. சென்ற வருடம் அரசு கல்லூரிகளுக்கான தேசிய அளவிலான கவுன்சலிங்குக்கு 9,000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். அதில் வெறும் 10% பேர்தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். வடஇந்தியர்களுக்கு இப்ப டிப்பின் முக்கியத்துவம் புரிகிறது. ஆனால், நம் மக்களுக்கு இன் னும் தெரியவில்லை. மேலும், பெண்களுக்கான துறையாகத் திகழ வேண்டிய இதில், அவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதும் அதிர்ச்சி. எங்கள் கல்லூரியில் படிக்கும் 700 மாணவர்களில் 7% மட்டுமே பெண்கள். மாநில அரசு சார்பாக திருச்சியில் இயங்கி வரும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் 60 இடங்கள் உள் ளன. ஆனால், அதில் வெறும் 18 பேர்தான் படிக்கிறார்கள்.
சமையல் மட்டுமல்ல… அது தொடர்பான பல விஷயங்களை உள்ளடக்கிய கேட்டரிங் டெக்னாலஜி பற்றியும், ஹோட்டல் சம்ப ந்தப்பட்ட ரிசப்ஷன், ரூம் சர்வீஸ், விருந்தினர்களை உபசரிப்பது, ஹோட்டல் பராமரிப்பு போன்ற இன்னும் பல்வேறு விஷயங்களை யும் உள்ளடக்கியதுதான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு” என் று விளக்கமாக சொன்ன ராஜமோகன், அதற்கான வேலைவாய் ப்பு மற்றும் சம்பள விவரங்களையும் தந்தார்.
”பி.ஏ, கலினரி ஆர்ட் படிப்பை முடித்தவர்கள், பலவித செஃப்கள் (Sous chef, Banquet chef, Restaurant chef, Personal chef), சமையலறை மேலாளர், உணவுசேவை இயக்குநர், உணவுஅலங் கரிப்பாளர் என பலவிதமான பணிகளுக்குத் தகுதி பெறுவார்கள். விமானம், கப்பல், ரயில்வே, மருத்துவமனைகள், சுற்றுலா துறை என பல துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின் றன.

படிப்பை முடித்து, ஹோட்டலில் செஃப் ஆக பணியில் சேர்பவர்க ளுக்கு ஆரம்பத்தில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிச்சயம். ஹோம் சயின்ஸ் முடித்தவர்கள் உணவு அறிவியல் துறை நிபுணராகவும், விளை யாட்டுத் துறை ஆலோசகராகவும், பன்னா ட்டு நிறுவனங்களில் ஊழியர் நலப் பணியாள ராகவும் வேலை வாய்ப்புகள் பெறலாம். இதில், இளநிலை முடித்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் முதுநிலை முடித்தவ ர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் ஆரம்பகட்ட சம்பளம் கியாரன்டி. மூன்று வருடங்களுக் குள் 50 ஆயிரத்துக்கும் மேல் சம்பளத்தை எட்ட முடியும்!
மூன்றாண்டு டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிடம், ஸ்காலர்ஷிப் என பல சலுகைகள் உள்ளன. இது போ ல நிறைய சலுகைகள் உள்ளன. எனவே, பெற்றோர்களும் மாண வர்களும் நம்பிக்கையுடன் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனே ஜ்மென்ட் படிப்புகளை ‘டிக்’ செய்யுங்கள்… வளமான வாழ்க்கை நிச்சயம்!” என்றார் ராஜமோகன்.
‘சரி, இந்தப் படிப்பு குறித்து, அதை படித்து வருபவர்கள் என்ன நினைக்கிறார்கள்..?’
சென்னை, கொரட்டூரில் இருக்கும் பக்த வச்சலம் நினைவு மகளிர் கல்லூரியில் பி. எஸ்சி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும் சுஜாதாவிடம் கேட்டபோது…
”ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பவர்களுக்கு ஃப்ரென்ட் ஆபீஸி ல் ஆரம்பித்து லாபி மேனே ஜர், கெஸ்ட் ரிலேஷன்ஸ், எக்ஸிகியூ டிவ் அக்கவுன்டன்ட், ரிசப்ஷனிஸ்ட், பெல் கேப்டன் என பல பணி களுக்கும் செல்ல வாய்ப்பிருக் கிறது. ஆனால், இன்னும் இந்தப் படிப்பைப் பற்றிய சரியான விழிப்பு உணர்வுதான் இங்கே இல் லை. என் னிடம்கூட, ‘கேட்ட ரிங்கா படிக்கப்போற..?’ என்று என் தோழிகளே கேட்டிருக்கிறா ர்கள். அவர்கள் படிக்கும் டிகிரிக்கு… வேலை உத்தரவாதம் குறை வு. ஆனால், எனக்கு படிப்பை முடித் தவுடன் நிச்சயம் காத்திருக் கின்றன பணியிடங்கள் பல. அப்போது புரியும் அவர்களுக்கு இந்தப் படிப்பின் வேல்யூ!” என்றார் சுஜாதா புன்ன கையுடன்!
***
படிப்புகள் பலவிதம்!
மத்திய அரசின் ‘இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ கல்வி நிறுவனங்கள் நாடு முழுவதும் 19 இடங்களில் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் மட்டுமே இயங்கி வருகிறது. இவற்றில்… இரண்டு மாத சான்றிதழ் பயிற்சி; ஓராண் டு, இரண்டாண்டுகள், மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமா படி ப்புகள்; பி.எஸ்சி, கேட்டரிங் சயின்ஸ் அண்ட் ஹோட்டல் மேனேஜ் மென்ட் (3 ஆண்டுகள்), பி.ஏ, கலினரி ஆர்ட் (B.A, Culinary Art), பி.ஹெச்.எம். ஹோட்டல் மேனேஜ்மென்ட் (4 ஆண்டுகள்) போன்ற இளநிலை படிப்புகள்; மற்றும் முதுநிலை படிப்புகள் என்று பல விதமான படிப்புகள் உள்ளன.
Tthanks  - சா.வடிவரசு, விகடன்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர், ரா.மூகாம்பிகை

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1