.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற இடங்களுக்கு மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க கோரிக்கை!

Unknown | 8:48 PM | 0 comments


.
.

தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற இடங்களுக்கு மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோவை தொழில்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு கோவை தொழில்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில், 

தமிழகத்தில் நிலவும் மின்சார பற்றாக்குறையின் காரணமாக, சென்னையைத் தவிர மற்ற இடங்களில் 4 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 10 மணி நேரம் வரை மின் தடை செய்யப்படுகிறது. ஆனால், சென்னையிலோ வெறும் 2 மணி நேரம் மட்டுமே மின் தடை நிலவுகிறது. 

இந்த நிலையில், மின் தடையின் காரணமாக ஜெனரேட்டர்களைக் கொண்டு பணியாற்றும் எங்களுக்கு, நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், மின் கட்டணத்தைக் குறைத்து நடவடிக்கை எடுக்கலாம். மின் தடை மாநிலம் முழுவதுக்கும் ஒரு சீராக இல்லாத நிலையில், மின் கட்டணத்தை மட்டும் ஏன் ஒரே சீராக இருக்க வேண்டும். 

அதிக நன்மை அடையும் சென்னைக்கு ஒரு கட்டணமும், பாதிக்கப்படும் மாவட்டங்களுக்குக் குறைவான கட்டணமும் வசூலிக்கலாம் என்று கூறியுள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1