.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை கைது செய்வதை நிறுத்துங்கள்.. சீமான் கோரிக்கை

Unknown | 9:08 AM | 0 comments


தென்னாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் கோவை, நெல்லையில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய இளைஞர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து, விசாரணைக்கு உட்படத்துவது ஏற்கத்தக்கதல்ல, இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் தலைவர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

 இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலம் பெங்களூர், மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் குறிப்பாக கோவையில் வசிக்கும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதும், பின்னர் தொடர்பற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

 இது தொடர்பாக கோவை கோட்டைமேடு பகுதியில் சோதனை என்ற பெயரில் வந்த கர்நாடக காவல்துறையினர் எந்த பொருளையும் கண்டுபிடிக்காமல் திரும்பியுள்ளனர். 

இந்த வழக்கு தொடர்பாக பீர்முகமது என்பவருடன் தங்கியிருந்ததாக அலியப்பா என்பவரை கர்நாடக காவல்துறை பிடித்துச்சென்று யாருக்கும் தெரியாமலேயே காவலில் வைத்து விசாரித்துள்ளது. 

தென்னாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் கோவை, நெல்லையில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய இளைஞர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து, விசாரணைக்கு உட்படத்துவது ஏற்கத்தக்கதல்ல, இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். 

இப்படிப்பட்ட அத்துமீறல்கள் தொடர்ந்தால் இந்திய சமூக வாழ்வில் இருந்து அன்னியப்படும் ஒரு மனநிலை முஸ்லீம் இளைஞர்களிடம் ஏற்பட்டுவிடும் என்று சீமான் எச்சரித்துள்ளார். 


Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1