.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

10ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகிறது.நமது வலைத்தளத்திலும் வெளியிடப்படுகிறது .

Unknown | 9:03 PM | 0 comments

.
சென்னை:  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நாளை சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்தில் வெளியாகிறது. அதே நேரத்தில் அனைத்து பள்ளிகளிலும் தேர்வு முடிவுகள் ஒட்டப்படும். கடந்த மார்ச் 27ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு தொடங்கியது. ஏப்ரல் 12ல் முடிந்தது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 11 ஆயிரத்து 359 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 69 ஆயிரத்து 501 பேர் எழுதினர்.  

சென்னையில் மட்டும் 591 பள்ளிகளை சேர்ந்த 59 ஆயிரத்து 110 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். புதுச்சேரியில் 267 பள்ளிகளை சேர்ந்த 18ஆயிரத்து 707 பேர் எழுதினர். தமிழ் வழியில் படித்த மாணவர்கள் 7 லட்சத்து 70 ஆயிரத்து 158 பேர் எழுதியுள்ளனர். தனித் தேர்வர்கள் 70 ஆயிரத்து 233 பேர். 

ஏப்ரல் 1ம் தேதி ஆங்கிலம் முதல்தாள் தேர்வு நடந்தது. சத்தியமங்கலம் மையத்தில் தேர்வு எழுதிய 221 மாணவர்களின் விடைத்தாள் கட்டு அங்குள்ள தபால் அலுவலகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அது காணாமல் போனது.

அதேபோல விருத்தாசலம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள் கட்டு கீழே விழுந்து சிதைந்தது. இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், நாளை காலை 9.15 மணி அளவில், நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வு முடிவுகளை இயக்குநர் வசுந்தரா தேவி வெளியிடுகிறார். 

தேர்வு முடிவு அறிய
http:/tnresults.nic.in
http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in
http://dge3.tn.nic.in
குறிப்பு : +2 தேர்வு முடிவுகளை நமது வலைத்தளம் வெளியிட்டது .அதுப்போல SSLC தேர்வு முடிவுகளும்  நமது வலைத்தளத்தில் வெளிவருகிறது .அனைவரும் இதை பயன் படுத்தி
கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1